Suratha, Tamil Poet -Sir Jagadish Chandra Bose - Physicist, Botanist - Thomas Henderson, Scottish Astronomer - Puttaparthi Saibaba - Ariyalur District Formed - November 23
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Suratha, Tamil Poet -Sir Jagadish Chandra Bose - Physicist, Botanist - Thomas Henderson, Scottish Astronomer - Puttaparthi Saibaba - Ariyalur District Formed."
Suratha - Poet |
சுரதா - Suratha, Renowned Tamil Poet :
✒️Suratha, the parable poet who gave a new form to poetry, was born on 23 November 1921 in Tanjore district. His original name was Rasagopalan. He changed his name to Subburathina Dasan based on Pavender's birth name Subburathinam. He became a literary creator under the name of Suratha. He was hailed as an parable poet as he was adept at creating poetry with similes without changing the tradition of poetry. He met Bharathidasan in 1941. Then he was his supporter for a while. He wrote the dialogue for the movie "Mangaiyarkarasi" in 1944. He has written more than 100 film songs, including songs like "Amudhum Thenum Edharku", "Aadi Adangum Vazhkaiyada", etc. Bharathidasan's poems, which were in several volumes, were published as a single collection through his efforts. He has received many awards and prizes including Bharathidasan Award of Tamil Nadu Government, Kalaimamani Award, Rajarajan Award of Tanjore Tamil University, Mahakavi Kumaran Aasan Award. He participated as a special invitee in the 1987 World Tamil Conference in Malaysia. A statue of him has been erected in Chennai in honor of his service towards Tamil. Parable poet Suratha, whose life was poetry, passed away on June 20, 2006.
- கவிதைக்கு புது வடிவம் கொடுத்த உவமைக் கவிஞர் சுரதா 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராசகோபாலன்.
- பாவேந்தரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாகக் கொண்டு சுப்புரத்தினதாசன் என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். இவர் சுரதா என்னும் பெயரில் இலக்கியப் படைப்பாளியாக திகழ்ந்தார்.
- செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர் என்பதால் உவமைக் கவிஞர் என போற்றப்பட்டார். இவர் பாரதிதாசனை 1941ஆம் ஆண்டு சந்தித்தார். பின்பு சிறிதுகாலம் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.
- இவர் மங்கையர்க்கரசி திரைப்படத்திற்கு 1944ஆம் ஆண்டு வசனம் எழுதினார். அமுதும் தேனும் எதற்கு, ஆடி அடங்கும் வாழ்க்கையடா போன்ற பாடல்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார்.
- பல நூல்களாக இருந்த பாரதிதாசன் கவிதைகள் இவரது முயற்சியால் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டது. தமிழக அரசின் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருது, மகாகவி குமரன் ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகள், பரிசுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் 1987ஆம் ஆண்டு நடந்த உலக தமிழ் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
- இவரது தமிழ் தொண்டை கௌரவித்து சென்னையில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. கவிதை படைப்பதை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த உவமைக் கவிஞர் சுரதா 2006ஆம் ஆண்டு ஜுன் 20ந் தேதி மறைந்தார்.
👉Click here to buy Suratha Collections.
ஜெகதீஷ் சந்திர போஸ் - Sir Jagadish Chandra Bose - Physicist, Botanist :
✒️Today Sir Jagadish Chandra Bose's Memorial Day, a renowned Indian scientist who revealed to the world the fact that plants also have life...
👉Click here to know more about "Sir Jagadish Chandra Bose".
- இன்று இவரின் நினைவு தினம் !
- தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பங்களாதேஷில், ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார்.
- லண்டனில் இருக்கும்போது லோர் ரிலே என்ற அறிவியல் அறிஞரின் தொடர்பு இவருக்கு கிடைத்தது. அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் துணையோடு தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் போஸ் பெரும் ஆர்வம் காட்டினார்.
- இயற்பியல் அறிஞரான இவர் ரேடியோ அலைகளில் ஆய்வு செய்து, மார்க்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பினை கண்டுபிடித்தார். இவர் இயற்றிய நூல்கள் உயிரினங்களின் மற்றும் உயிரற்றவைகளின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) மற்றும் தாவரங்களின் நரம்புச் செயலமைவு (The Nervous Mechanism of Plants).
- மனஉறுதி, துணிச்சல், நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, பொறுமை ஆகியவைகளுக்கு உறைவிடமாய் தாம் மேற்கொண்ட அனைத்து அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பெரும் வெற்றியும், பெரும் புகழும் ஈட்டியதன் வாயிலாக இந்தியாவின் புகழை உலக அரங்கில் ஒங்க செய்தவர், 1937ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி மறைந்தார்.
👉Click here to buy Sir Jagadish Chandra Bose Collections
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟The Foreigners Act, 1946 : It was enacted on 23rd November 1946 & came into force on 23rd April 1946, to confer upon the Central Government certain powers in respect of foreigners.
🌟 தாமஸ் ஹென்டர்சன், ஸ்காட்டிஷ் வானியலாளர், ஆல்பா சென்டாரிக்கான(சூரியனில் இருந்து மிக அருகில் உள்ள நட்சத்திர அமைப்பு ஆகும்) தூரத்தை அளந்த முதல் நபர், நவம்பர் 23, 1844 அன்று காலமானார் - Thomas Henderson, Scottish astronomer, first person to measure the distance to Alpha Centauri (closest star system to the Sun) was passed away on 23rd November 1844.
🌟 1926ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி புட்டபர்த்தி சாய்பாபா பிறந்தார் - Puttaparthi Saibaba was born on November 23, 1926.
🌟 2007ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது - Ariyalur district was formed on 23rd November 2007.
🖋I hope you may have learned little things about the following;
👉Click here to buy Best Sellers in Books.
👇My Other Blogs:
🌟https://spanishviatamil.blogspot.com
🌟 https://law-worldhistory.blogspot.com
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment