Jhalkaribai, Woman Soldier, Freedom Fighter - Robert Clive, Army Officer - Louis Eugene Felix Neel, French physicist & Nobel Laureate - Albanian alphabets - M.G.K.Menon, Renowned Indian Physicist - 11th Olympic Games - Rasmus Lerdorf, Software Developer - Microsoft's releases Xbox 360 - November 22

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Jhalkaribai, Woman Soldier, Freedom Fighter - Robert Clive, Army Officer - Louis Eugene Felix Neel, French physicist & Nobel Laureate - Albanian alphabets - M.G.K.Menon, Renowned Indian Physicist - 11th Olympic Games - Rasmus Lerdorf, Software Developer - Microsoft's releases Xbox 360."


ஜல்காரிபாய் - Jhalkaribai - Freedom Fighter - Woman Soldier (served in the women's army of queen Lakshmibai of Jhansi & played an important role in the Indian Rebellion of 1857) :

✒️Indian freedom fighter Jhalkaribai was born on 22nd November 1830 in the village of Bhojla in the Bundelkhand region of Uttar Pradesh.

👉Click here to know more about Jhalkaribai.

  • சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜல்காரிபாய் 1830ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள போஜ்லா என்ற கிராமத்தில் பிறந்தார்.

  • இவர் சிறுவயதிலேயே குதிரையேற்றம், வாள்வீச்சு உள்ளிட்ட அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். ஜான்சி ராணி லட்சுமிபாய் இவரது போர்த்திறன், துணிச்சல் வீரத்தைக் கண்டு ஆச்சரியமடைந்து, ஜல்காரிபாயை தன் படையில் சேர்த்துக்கொண்டார்.
  • ஜான்சி கோட்டையின் மீது ஆங்கில அரசு பலமுறை படை எடுத்தது. ஒவ்வொரு முறையும் படையெடுப்புகளை ஜான்சி ராணியின் வீரப்படை முறியடித்தது. அதில் இவரது பங்கு முக்கியமானது.
  • 1857ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போரின்போது, மிகப்பெரிய படையுடன் ஆங்கில அரசு ஜான்சியை முற்றுகையிட்டது. கல்பி என்ற இடத்தில், மற்ற புரட்சிப் படைகளுடன் இணைவதாகத் திட்டமிட்டிருந்த ஜான்சி ராணிக்கு, பெரிய படையை எதிர்த்துப் போரிடுவது சவாலாக இருந்தது.

  • ராணி வேடத்தில் தானே முன்னின்று போரிடுவதாக கூறிய ஜல்காரிபாய், தந்திரமாக ராணியை கோட்டையில் இருந்து தப்ப வைத்தார். அதே நேரத்தில் ஜான்சி படைக்குத் தலைமை வகித்து வீரத்துடன் போரிட்டார். ஆனால், மாபெரும் படையை எதிர்த்துப் போராட முடியாமல் எதிரிகளிடம் பிடிபட்டார்.

  • ஜான்சி ராணியை பிடித்துவிட்டதாக கூறிய ஆங்கில அரசு ஜல்காரிபாயிடம் 'உங்களை என்ன செய்வது?" என்று கேட்டனர். அதற்கு 'தூக்கிலிடுங்கள்" என்றார். பின்னர், அவர் ராணி அல்ல என்ற உண்மையை அறிந்த ஆங்கில அரசு, அவரது வீரத்தையும், விவேகத்தையும் பாராட்டி விடுதலை செய்தது.
  • ஜல்காரிபாய் 1858ஆம் ஆண்டு ஜான்சி போரின்போது வீரமரணம் அடைந்ததாக சில குறிப்புகள் கூறுகின்றன, 1890-ல் மறைந்ததாக சில குறிப்புகள் கூறுகின்றன.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟The Public Debt Act, 1944 : It was enacted & enforced on 22nd November 1944, to consolidate and amend the law relating to Government securities and to the management by the Reserve Bank of India of the public debt of the Government.


🌟 1774ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி ஆங்கிலேய இராணுவ அதிகாரி ராபர்ட் கிளைவ் மறைந்தார் - Robert Clive, an Army officer, died on November 22, 1774.


🌟 காந்தவியல் ஆராய்ச்சிக்காகப் புகழ்பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர் மற்றும் நோபல் பரிசு பெற்ற லூயிஸ் யூஜின் பெலிக்ஸ் நீல் 22 நவம்பர் 1904ஆம் ஆண்டு பிறந்தார்  - Louis Eugene Felix Neel, French physicist & Nobel Laureate, noted for research on magnetism was born on 22nd November 1904.


🌟 1908ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது - The Albanian alphabet was introduced on November 22, 1908.


🌟 11வது ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், 1956 ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி தொடங்கியது - The 11th Olympic Games has began in Melbourne, Australia on 1956, November 22.


M.G.K.Menon - Physicist

🌟 புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர் எம்.ஜி.கே.மேனன் நவம்பர் 22, 1928 இல் பிறந்தார் - M.G.K.Menon, Renowned Indian Physicist was born on 22nd November 1928.


🌟 1968ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி பி.ஹெச்.பி (PHP) நிரலாக்க மொழியை உருவாக்கிய ரஸ்மஸ் லெர்டெர்ஃப் பிறந்தார் - Rasmus Lerdorf was born on November 22, 1968, the creator of the PHP programming language.


🌟 2005ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டது - Microsoft releases Xbox 360 video game on November 22, 2005.


🖋I hope you may have learned little things about the following;

Jhalkaribai, Woman Soldier, Freedom Fighter - Robert Clive, Army Officer - Louis Eugene Felix Neel, French physicist & Nobel Laureate - Albanian alphabets - M.G.K.Menon, Renowned Indian Physicist - 11th Olympic Games - Rasmus Lerdorf, Software Developer - Microsoft's releases Xbox 360.

👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email:christothomasnoble@gmail.com

Comments