Janaki Ammal, Indian Botanist - Shakuntala Devi, Indian Mathematician - Vasudev Balwant Bhatke, Revolutionary - Washington University Started - Nature, Scientific Journal Publish - Hara Takashi, Japanese Prime Minister assassination - October 4
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Janaki Ammal, Indian Botanist - Shakuntala Devi, Indian Mathematician - Vasudev Balwant Phatke, Revolutionary - Washington University Started - Nature, Scientific Journal Publish - Hara Takashi, Japanese Prime Minister assassination."
ஜானகி அம்மாள் - Janaki Ammal - Indian Botanist :
✒️Botanist and Geneticist Janaki Ammal was born on 4th November 1897 in Thalassery, Kerala. In 1945 she published a set of maps called Plant Chromosome Atlas in association with world renowned botanist Cyril Darlington. She worked as an associate geneticist at the John Innes Horticultural Institute in London. She returned to the country in 1951 accepting Jawaharlal Nehru's invitation to reorganize and consolidate the Botanical Survey of India. She also took charge as the Director General of Indian Botanical Society. She created several hybrid breeds. Her biophysical studies on sugarcane led to the development of many hybrid and genetic hybrids of sugarcane. In 1956, the University of Michigan awarded her an LL.D. She was awarded the Padma Shri in 1977. In 2000, a National Award for Taxonomy was established in her name. Janaki Ammal passed away in 1984 after a lifetime of accumulating knowledge of Indian herbalism.
- தாவரவியல் நிபுணரும், மரபினக் கலப்பு ஆராய்ச்சியாளருமான ஜானகி அம்மாள் 1897ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி கேரள மாநிலம் தலச்சேரியில் பிறந்தார்.
- உலகப் புகழ்பெற்ற தாவரவியலாளர் சிரில் டார்லிங்டன் உடன் இணைந்து தாவர குரோமோசோம் அட்லஸ் என்ற வரைபடத் தொகுப்பை 1945ஆம் ஆண்டு வெளியிட்டார். லண்டனில் உள்ள ஜான் இன்னஸ் தோட்டக்கலை நிறுவனத்தில் இணை மரபியலாளராகப் பணிபுரிந்தார்.
- இந்திய தாவரவியல் சர்வே அமைப்பை சீரமைத்து, ஒருங்கிணைப்பதற்காக ஜவஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று 1951ஆம் ஆண்டு நாடு திரும்பினார். மேலும் இந்தியத் தாவரவியல் அமைப்பின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார்
- பல கலப்பு மரபின வகைகளை உருவாக்கினார். கரும்பு சம்பந்தமாக இவர் மேற்கொண்ட உயிர் கலவியல் ஆய்வுகள் பல சிறப்பினக் கலப்பு, மரபினக் கலப்பு வகை கரும்புகளையும் உருவாக்க வழிவகுத்தன.
- 1956ஆம் ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகம் இவருக்கு எல்எல்டி பட்டம் வழங்கியது. 1977ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். 2000-ஆம் ஆண்டில் வகைப்பாட்டியலுக்கான தேசிய விருது இவரது பெயரில் நிறுவப்பட்டது.
- இந்தியப் பாரம்பரிய தாவரவியல் பற்றிய அறிவை திரட்டும் பணியில் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்ட ஜானகி அம்மாள் 1984ஆம் ஆண்டு பிப்ரவரி 7ந் தேதி மறைந்தார்.
Shakuntala Devi - Mathematician |
சகுந்தலா தேவி - Shakuntala Devi - Indian Mathematician :
- இந்திய பெண் கணித மேதையான சகுந்தலா தேவி 1929ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் பிறந்தார்.
- இவர் ஜூன் 18, 1980ஆம் ஆண்டு லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இரண்டு 13 இலக்க (அதாவது 7,686,369,774,870 * 2,465,099,745,779 = 18,947,668,177,995,426,462,773,730) எண்களை பெருக்கி வெறும் 28 வினாடிகளில் கூறி உலகையே வியக்க வைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்ட ஒரு எண் ஆகும். இது உலக சாதனையாக, 'கின்னஸ் புத்தகத்தில்" இடம் பெற்றுள்ளது.
- தி புக் ஆஃப் நம்பர்ஸ் (The Book of Numbers), பெர்ஃபெக்ட் மர்டர் (Perfect Murder), ஃபிகரிங் : தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ் ( Figuring The Joy of Numbers), இன் தி வொண்டேர்லாண்ட் ஆஃப் நம்பர்ஸ் (In the Wonderland of Numbers), அஸ்ட்ராலஜி ஃபார் யூ ( Astrology for you) போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஆகும்.
- "மனித-கணினி" (Human Computer) என புகழப்படும் சகுந்தலா தேவி அவர்கள் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 21ந் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 1845ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி இந்திய விடுதலை இயக்க ஆயுதப் புரட்சிக் குழுக்களின் தந்தை வாசுதேவ் பல்வந்த் பட்கே மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்தார் - On November 4, 1845, Vasudev Balwant Phatke, the father of the armed revolutionary groups of the Indian Liberation Movement, was born in the state of Maharashtra.
🌟 வாஷிங்டன் பல்கலைக்கழகம், 1861ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது - Washington University was started on 1861 november 4.
🌟 1869ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது - On November 4, 1869, the scientific journal Nature was first published.
🌟 1921ஆம் ஆண்டு, நவம்பர் 4ந் தேதியன்று ஜப்பானிய பிரதமர் ஹரா தகாஷி டோக்கியோவில் ஒரு ரயில்வே பணியாளரால் குத்திக் கொல்லப்பட்டார் - On November 4, 1921, Japanese Prime Minister Hara Takashi was stabbed to death in Tokyo by a railway man.
🖋I hope you may have learned little things about the following;
Janaki Ammal, Indian Botanist - Shakuntala Devi, Indian Mathematician - Vasudev Balwant Phatke, Revolutionary - Washington University Started - Nature, Scientific Journal Publish - Hara Takashi, Japanese Prime Minister assassination.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment