Today World History - O.P. Ramaswamy Reddiyar - Kalpana Chawla - India's first Railway Museum - First edition of the Oxford English Dictionary - 01 February
Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "O.P. Ramaswamy Reddiyar" The Politician, Freedom fighter and Former Chief Minister of Madras Presidency, whose birthday is celebrating today and the Next Icon was "Kalpana Chawla", whose memorial date observe today, she was an Indian born American astronaut, Engineer and the First woman of Indian origin to go to space. Apart from the above another two incidents also happens today, it's all about "India's Railway Museum" and "Oxford English Dictionary"...
மத்திய பட்ஜெட் - Union Budget :
- இந்தியாவில், வரவிருக்கும் நிதியாண்டிற்கான அரசாங்கத்தின் வருவாய் மற்றும் செலவுத் திட்டங்களை கோடிட்டுக் காட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சரால் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
Indian Coast Guard Day - இந்தியக் கடலோரக் காவல்படை தினம் :
- இந்தியக் கடலோரக் காவல்படை, பிப்ரவரி 1ஆம் தேதி, அதன் நிறுவன தினத்தை கொண்டாடுகிறது. இந்தியக் கடலோரக் காவல்படை இந்தியக் கடலோரப் பகுதியைப் பாதுகாப்பதிலும், இந்தியாவின் கடல்சார் மண்டலங்களுக்குள் விதிமுறைகளை அமல்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.
| O.P.Ramaswamy Reddiyar - Chief Minister of Madras Presidency |
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் - O.P.Ramaswamy Reddiyar - Politician - Freedom Fighter - Former Chief Minister of Madras Presidency :
- விடுதலைப் போராட்ட வீரரும், சென்னையின் முன்னாள் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 1895ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் கிராமத்தில் பிறந்தார்.
- இவர் மிக இளம்வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றினார்.
- இவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1947ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி முதல் 1949ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி வரை பதவியில் இருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில் தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குள் செல்வதற்கான முழு உரிமை அதிகாரச் சட்டம் 1947ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. மேலும், இவர் ஜமீன்தார் இனமுறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தார்.
- முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகு இவரது மனம் ஆன்மீகத்திலும், சமூக சேவையிலும் நாட்டம் கொண்டது. வள்ளலாரால் ஈர்க்கப்பட்டு, சமரச சுத்த சன்மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பல தொண்டு அமைப்புகளை நிறுவினார்.
- நேர்மையும், துணிச்சலும் மிக்க அரசியல்வாதியாகப் போற்றப்படும் இவர், 1970ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ந் தேதி மறைந்தார்.
கல்பனா சாவ்லா - Kalpana Chawla - Indian-born American Astronaut - Engineer - First woman of Indian origin to go into Space :
- இன்று இவரின் நினைவு தினம் !
- இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா 1962ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் என்ற நகரத்தில் பிறந்தார். இவருடைய பள்ளி சான்றிதழ்களில் 1961ஆம் ஆண்டு, ஜூலை 1ஆம் தேதி பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இவர் 1997ஆம் ஆண்டு கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ்-87ல் ஆறு வீரர்கள் கொண்ட குழுவுடன் முதல் முறையாக விண்வெளிக்கு சென்றார். இந்த விண்கலம் விண்வெளியில் 16 நாட்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு 252 தடவை பூமியைச் சுற்றியது.
- மீண்டும் 2003ஆம் ஆண்டு கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107ல் கல்பனா உள்ளிட்ட ஏழு வீரர்கள் அடங்கிய குழு சென்றனர். பிப்ரவரி 1ஆம் தேதி, பயணம் முடித்து தரையிறங்குவதற்கு சுமார் 15 நிமிடங்கள் இருந்தபோது, விண்கலம் வெடித்துச் சிதறியது. இதில் கல்பனா உட்பட ஏழு பேரும் உயிரிழந்தனர்.
- வானத்தை வசப்படுத்திய கல்பனா சாவ்லா 2003ஆம் ஆண்டு பிப்ரவரி 1ந் தேதி (இன்று) தனது 40வது வயதில் மறைந்தார். இவரை கௌரவிக்கும் விதமாக கர்நாடக அரசும், இந்திய அரசும் சாதனை புரியும் பெண்களுக்கு இவரது பெயரில் விருது வழங்கி வருகிறது.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 1977ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி இந்தியாவின் முதல் இரயில்வே அருங்காட்சியகம் சாணக்கியபுரி, புதுடில்லியில் திறக்கப்பட்டது - On 1st February 1977, India's first Railway Museum was opened at Chanakyapuri, New Delhi.
🌟 1884ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியின் முதல் பதிப்பு வெளியானது - On 1st February, 1884, the first edition of the Oxford English Dictionary was published.
✒️ I hope you may have learned little things about the following ;
O.P.Ramaswamy Reddiyar - Kalpana Chawla - India's first Railway Museum - First edition of the Oxford English Dictionary - (Werner Heisenberg - German physicist).
👉Click here to buy Best Sellers in Books.
👇My Other Blogs:
https://law-worldhistory.blogspot.com
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment