V.O.C, Freedom Fighter - Tirumalai Krishnamacharya, Yoga Teacher & Ayurvedic Healer - Asia's biggest bus terminus Opened - Niels Bohr, Nuclear physicist - Batukeshwar Dutt, Freedom Fighter - Louis Daguerre, French Painter and Physicist - November 18
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "V.O.C, Freedom Fighter - Tirumalai Krishnamacharya, Yoga Teacher & Ayurvedic Healer - Asia's biggest bus terminus Opened - Niels Bohr, Nuclear physicist - Batukeshwar Dutt, Freedom Fighter - Louis Daguerre, French Painter and Physicist."
V.O.C - Indian Freedom Fighter |
வ.உ.சிதம்பரம்பிள்ளை - Valliyappan Olaganathan Chidambaram Pillai - Freedom Fighter :
- இன்று இவரின் நினைவு தினம் !
- கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை 1872ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை.
- ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிக்க எண்ணிய வ.உ.சிதம்பரம்பிள்ளை 1906ஆம் ஆண்டு, அக்டோபர் 16ஆம் தேதி சுதேசி கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். நிறுவனத்தின் தலைவராகப் பாண்டித்துரைத் தேவரும், செயலராக வ.உ.சிதம்பரம்பிள்ளையும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
- வ.உ.சிதம்பரம்பிள்ளை விடுதலைப்போரில் தீவிரப்பங்கு எடுத்ததைப் போல் தமிழுக்கும் புகழ்மிக்க தொண்டு செய்துள்ளார். திருவள்ளுவரின் திருக்குறளுக்கு எளிய உரை எழுதி வெளியிட்டார். 1936ஆம் ஆண்டு, நவம்பர் 18ஆம் தேதி வ.உ.சிதம்பரம்பிள்ளை மறைந்தார்.
👉Click here to buy; VOC Pillai Collections.
திருமலை கிருஷ்ணமாச்சாரியார் - Tirumalai Krishnamacharya - Yoga Teacher & Ayurvedic Healer :
- இந்தியாவின் தலைசிறந்த யோகா குருவாகவும், ஆயுர்வேத பண்டிதராகவும் திகழ்ந்த திருமலை கிருஷ்ணமாச்சாரியார் 1888ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி கர்நாடக மாநிலம் சித்ராதுர்கா மாவட்டத்தில் முச்சுகுண்டபுரம் என்ற இடத்தில் பிறந்தார்.
- 16 வயதில் இவருடைய கனவில் இவரின், மூதாதையரும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் தலைசிறந்த யோகியுமான நாதமுனி தோன்றி, தமிழகத்தின் ஆழ்வார் திருநகருக்குச் செல்லுமாறு கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, அதை மேற்கொண்டு இவர் தமிழகம் வந்தார்.
- இவர் 1916ஆம் ஆண்டு யோகேஷ்வரா ராமா மோகனிடம் கல்வி பெற கைலாய மலைக்குச் சென்றார். அங்கு ஏழரை ஆண்டுகள் யோகா பயிற்சிகளை ஆழமாகப் பயின்றார். 11 வருடங்கள் பனாரஸ்சில் தங்கியிருந்தார். மைசூர் மகாராஜாவின் உதவியுடன் யோகசாலா என்ற பிரத்யேக யோகா அமைப்பை 1933ஆம் ஆண்டு தொடங்கினார்.
- இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உரைகள் மூலமாகவும், செயல்முறை விளக்கம் மூலமாகவும் யோகாவை வளர்த்தார். யோகா பயிற்சி, ஆயுர்வேதம் மூலமாக நோய்களை குணப்படுத்தினார். யோக மகரன்தா, யோகாசனகளு, யோக ரஹஸ்யா, யோகாவளி ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.
- யோகாஞ்சலிசாரம், எஃபக்ட் ஆஃப் யோகா பிராக்டீஸ் உள்ளிட்ட பல கட்டுரைகளையும், கவிதைகளையும் இவர் எழுதியுள்ளார். 20-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற யோகா குருவாகப் போற்றப்பட்ட திருமலை கிருஷ்ணமாச்சாரியார் 1989ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி மறைந்தார்.
👉Click here to buy T.Krishnamacharya Collections.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟ரஞ்சன் கோகோய், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி, தற்போதைய ராஜ்ய சபா எம்.பி, நவம்பர் 18, 1954 இல், அஸ்ஸாமில் பிறந்தவர், வலுவான சட்டப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது தந்தை கேசப் சந்திர கோகோய், அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் - Ranjan Gogoi is a former Chief Justice of India. Present Rajya Sabha M.P. Born on November 18, 1954, in Assam, he hails from a family with a strong legal background. His father Kesab Chandra Gogoi was a former Chief Minister of Assam.
🌟 2002ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி சென்னை புறநகர் பேருந்து நிலையம் (ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம்) கோயம்பேட்டில் திறக்கப்பட்டது - On 18 November 2002, the Chennai Suburban Bus Station (Asia's biggest bus terminus) was opened at Koyambedu.
🌟 1962ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி அணு இயற்பியல் விஞ்ஞானியான நீல்ஸ் போர் மறைந்தார் - Nuclear physicist Niels Bohr died on 18th November 1962.
🌟 1910ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பதுகேஷ்வர் தத் பிறந்தார் - Indian freedom fighter Batukeshwar Dutt was born on November 18, 1910.
🌟 லூயிஸ் டாகுரே, பிரெஞ்சு ஓவியர் மற்றும் இயற்பியலாளர், புகைப்படக் கண்டுபிடிப்பாளர் (daguerreotype) 1787 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி பிரான்சின் பாரிஸுக்கு அருகில் உள்ள கார்மெயில்ஸில் பிறந்தார் - Louis Daguerre, French Painter and Physicist, Inventor of Photography (daguerreotype) was born on 18th November 1787, Cormeilles, near Paris, France.
🌟 இன்று, நவம்பர் 18, மொராக்கோ தனது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது - Today, November 18, Morocco celebrates its Independence Day.
🖋I hope you may have learned little things about the following;
V.O.C, Freedom Fighter - Tirumalai Krishnamacharya, Yoga Teacher & Ayurvedic Healer - Asia's biggest bus terminus Opened - Niels Bohr, Nuclear physicist - Batukeshwar Dutt, Freedom Fighter - Louis Daguerre, French Painter and Physicist.
👉Click here to buy Best Sellers in Books.
👇My Other Blogs:
https://law-worldhistory.blogspot.com
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
email:christothomasnoble@gmail.com
Comments
Post a Comment