World Animal Day - World Space Week - Subramaniya Siva, Indian freedom fighter & Writer - Tiruppur Kumaran, Indian revolutionary & Freedom fighter - Sputnik 1, Artificial Satellite - 4 October

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "World Animal Day - World Space Week - Subramaniya Siva, Indian freedom fighter & Writer - Tiruppur Kumaran, Indian revolutionary & Freedom fighter - Sputnik 1, Artificial Satellite."


உலக விலங்குகள் தினம் - World Animal Day :

✒️Animals are associated with human life. World Animal Day is observed on October 4 to raise awareness about the prevention of animal cruelty. This day is coined to commemorate Francis of Assisi, an Italian forest enthusiast.

  • விலங்குகள், மனித வாழ்க்கையோடு தொடர்பு உடையவை. விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்டோபர் 4ஆம் தேதி உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தாலியை சேர்ந்த வன ஆர்வலர் பிரான்சிஸ் ஆப் அசிசி என்பவரின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில், இத்தினம் உருவாக்கப்பட்டது.


உலக விண்வெளி வாரம் - World Space Week :

✒️World Space Week is celebrated every year from October 4 to October 10. World Space Week was established in 1999 by the United Nations to honor directors of the World Space Week Association Board who have made significant contributions to science, technology and human development.

  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மனித மேம்பாட்டிற்காக தங்கள் பங்களிப்பை கொடுத்து வரும் உலக விண்வெளி வார கழக வாரியத்தின் பணிப்பாளர்களை கௌரவிக்கும் விதமாக 1999ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச்சபையால் இத்தினம் அறிவிக்கப்பட்டது.


சுப்பிரமணிய சிவா - Subramaniya Siva - Indian freedom fighter & Writer :

✒️Freedom fighter and spiritualist Subramaniya Siva was born on 4th October 1884 in Batlagundu, Dindigul district. He gathered the youth in Thiruvananthapuram and formed an organization called "Dharma Paripalana Samajam." He started a monthly magazine called "Gnanabhanu". He then started a weekly magazine called 'Prapancha Mithra' in which he wrote articles under the pen name Naradha. He wrote more than 20 books including "Motsha Saadhanai Ragasiyam", "Arulmozhigal" and "Vedhantha Ragasiyam". His poems were later compiled under the name "Gnanabhanu". Admired as "Veeramurasu", Subramaniya Siva passed away on 23rd July 1925 due to ill health.

  • விடுதலைப் போராட்ட வீரரும், ஆன்மிகவாதியுமான சுப்பிரமணிய சிவா 1884ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் பிறந்தார்.

  • திருவனந்தபுரத்தில் இளைஞர்களை ஒன்றுதிரட்டி 'தர்ம பரிபாலன சமாஜம்" என்ற அமைப்பை உருவாக்கினார். 

  • 'ஞானபானு" என்ற மாத இதழை தொடங்கினார். பிறகு 'பிரபஞ்சமித்திரன்" என்ற வார இதழை தொடங்கினார். அதில் நாரதர் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார். மோட்ச சாதனை ரகசியம், அருள்மொழிகள், வேதாந்த ரகசியம் உட்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் பின்னர் 'ஞானபானு" என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. வீரமுரசு என்று போற்றப்பட்ட சுப்பிரமணிய சிவா உடல்நிலை பாதிக்கப்பட்டு 1925ஆம் ஆண்டு ஜுலை 23ந் தேதி மறைந்தார்.

Tiruppur Kumaran - Freedom Fighter

திருப்பூர் குமரன் - Tiruppur Kumaran (Kodi Kaatha Kumaran) - Indian Revolutionary - Freedom Fighter :

✒️Tiruppur Kumaran, a martyr of Indian freedom struggle, was born on 4th October 1904 in Chennimalai, Erode district. Kumaran was a patriot at a young age. Motivated by the desire for liberation, he participated demonstrations in Tiruppur. Later he led many protests. In January 1932, a protest took place in the land of Tamil Nadu, known for its bravery, in support of Gandhiji's civil disobedience movement. This was the historical event that determined Kumaran's destiny. He breathed his last on January 11, 1932 by chanting "Vande Mataram...Vande Mataram..." as the guards batoned and fired bullets.

  • இந்திய விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் 1904ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்தார். 

  • இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார் குமரன். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டார். பின்னர் பல போராட்டங்களுக்கு தலைமையேற்றார்.

  • கடந்த 1932ம் ஆண்டு ஜனவரியில், காந்தியடிகளின் சட்ட மறுப்பு இயக்கத்துக்கு ஆதரவாக வீரத்திற்கு பெயர் போன தமிழக மண்ணில் போராட்டம் நடந்தது. இதுவே குமரனின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது.

  • காவலர்கள் தடியடி நடத்தி, துப்பாக்கி குண்டுகளை பாய்ச்சிய போதும் 'வந்தே மாதரம்... வந்தே மாதரம்..." என்று முழங்கிக் கொண்டே அவரது இறுதி மூச்சு நின்ற நாள், 1932ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதியாகும்.

மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி, சோவியத் யூனியன் ஸ்புட்னிக் I ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது, இது பூமியைச் சுற்றி வந்த உலகின் முதல் செயற்கைக் கோளாகும் - On 4th October 1957, the Soviet Union successfully launched Sputnik I, which was world's first artificial satellite to orbit the Earth.


🖋I hope you may have learned little things about the following;

World Animal Day - World Space Week - Subramaniya Siva, Indian freedom fighter & Writer - Tiruppur Kumaran, Indian revolutionary & Freedom fighter - Sputnik 1, Artificial Satellite.


👇 My Other Blogs:


🌟https://spanishviatamil.blogspot.com

🌟 https://law-worldhistory.blogspot.com


- Have a nice day🌹

- C.Thomas Noble.

Comments

Popular posts from this blog