The Vellore Mutiny - Sunil Gavaskar, First Cricketer Reached 100 Test Matches in the World Cricket - Alice Ann Munro, Canadian Writer, Nobel Prize Laureate - Indian Writer G.A.Kulkarni - Louis Daguerre, The First Inventor of the Daguerreotype Process Photography - 10 July

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "The Vellore Mutiny - Sunil Gavaskar, First Cricketer Reached 100 Test Matches in the World Cricket  -  Ann Munro, Canadian Writer, Nobel Prize Laureate - Indian Writer G.A.Kulkarni - Louis Daguerre, The First Inventor of the Daguerreotype Process Photography."




வேலூர் சிப்பாய் எழுச்சி தினம் - The Vellore Mutiny :

✒️On July 10, 1806, hundreds of British soldiers and Indian freedom fighters were killed in an uprising at Vellore Fort in Tamil Nadu. Today, this day is observed to honor the memory of the soldiers who sacrificed their lives for the liberation of the nation.

  • 1806ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி தமிழ்நாட்டில் வேலூர் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் நூற்றுக்கணக்கான ஆங்கிலேயப் படையினர் மற்றும் இந்திய விடுதலை வீரர்களும் கொல்லப்பட்டனர். தேசத்தின் விடுதலைக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்களின் நினைவைப் போற்றும் விதமாக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.


சுனில் கவாஸ்கர் - Sunil Manohar Gavaskar - Former Greatest Indian Cricketer - Cricket Commentator :

✒️The first Cricketer reached 100 Test matches in the world, was born on 10 July 1949 in Mumbai. He started playing first-class cricket in 1966-67. He scored 156 and 102 in the 2nd and 3rd Tests against the West Indies in 1975–76. He has participated in a total of 125 international Test matches. He has also been a captain in Test matches. He has played 100 first-class cricket matches including Ranji Trophy and Irani Trophy. He has received many awards including Padma Bhushan, Arjuna Award, Lifetime Achievement Award.

  • உலக அளவில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் சுனில் கவாஸ்கர் 1949ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

  • இவர் 1966-67ஆம் ஆண்டு முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக 1975-76ஆம் ஆண்டு நடந்த போட்டியின் 2, 3-வது டெஸ்ட்களில் 156 மற்றும் 102 ரன்கள் விளாசினார். 

  • இவர் மொத்தம் 125 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகவும் இருந்துள்ளார். ரஞ்சிக் கோப்பை, இரானி கோப்பை உட்பட 100 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

  • பத்ம பூஷண், அர்ஜுனா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.


ஆலிஸ் ஆன் முன்ரோ - Alice Ann Munro - Canadian Short Story Writer - Nobel Prize Laureate :

✒️The Nobel laureate for literature and a world-renowned author, was born on July 10, 1931 in Wingham, Ontario, Canada. Her first book is "The Dimensions of a Shadow," "Dance of the Happy Shades" is the first story collection. Subsequently, his books appeared in various popular magazines. She has won the Governor General's Award for Fiction three times, the Man Booker Award, the O Henry Award, the Edward MacDowell Medal, and the W.H.Smith Literary Award. She was called the greatest writer of fiction and Canada's Chekhov.

  • இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும், உலகப் புகழ்பெற்ற படைப்பாளியுமான ஆலிஸ் ஆன் முன்ரோ 1931ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தில் விங்காம் என்ற பகுதியில் பிறந்தார்.

  • இவரது முதல் நூல் 'தி டைமன்ஷன்ஸ் ஆஃப் ஏ ஷாடோ' (The Dimensions of a Shadow), 'டான்ஸ் ஆஃப் தி ஹாப்பி ஷேட்ஸ்' (Dance of the Happy Shades) முதல் கதைத் தொகுப்பாகும். தொடர்ந்து பல்வேறு பிரபலமான பத்திரிக்கைகளில் இவரது நூல்கள் வெளிவந்தன.

  • இவர் கனடாவின் புனைக் கதைகளுக்கான ஆளுநர் விருதை (Governor General's Award) மூன்று முறையும், மேன் புக்கர் விருது (Man Booker), ஓ ஹென்றி விருது (O Henry Award), எட்வர்ட் மெக்டோவெல் பதக்கம் (Edward Macdowell Medal), டபிள்யு.ஹெச்.ஸ்மித் இலக்கிய விருது (WH Smith Literary Award) என பல விருதுகளை வென்றுள்ளார்.

  • புனைக்கதையின் மிகப்பெரிய எழுத்தாளர் என்றும், கனடாவின் செக்கோவ் (Chekhov) என்றும் இவர் அழைக்கப்பட்டார்.

👉Click here to buy; Alice Ann Munro Collections


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟1962ஆம் ஆண்டு ஜுலை 10ந் தேதி, உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது - On July 10, 1962, the world's first communication satellite, Telstar, was launched.


🌟1923ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி இந்திய எழுத்தாளர் ஜி.ஏ.குல்கர்னி பிறந்தார் - Indian writer G.A.Kulkarni was born on July 10, 1923.

👉Click here to buy; G.A.Kulkarni Collections


🌟1851ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி டாகுவேரியோவகை என்ற நிழற்படக் கருவியை முதன் முறையாக உருவாக்கியவரான லூயிஸ் டாகுவேர் மறைந்தார் - On July 10, 1851, Louis Daguerre, the first inventor of the daguerreotype process photography was died.


✒️I hope you may have learned little things about the following ; 

The Vellore Mutiny - Sunil Gavaskar, First Cricketer Reached 100 Test Matches in the World Cricket - Alice Ann Munro, Canadian Writer, Nobel Prize Laureate - Indian Writer G.A.Kulkarni - Louis Daguerre, The First Inventor of the Daguerreotype Process Photography.


- Have a nice day 🌹

- C.Thomas Noble


👇 My Other Blogs:

🌟https://spanishviatamil.blogspot.com

🌟https://law-worldhistory.blogspot.com

Comments

Popular posts from this blog