International Dance Day - Bharathidasan, Tamil Poet, Writer, Former MLA, Rationalist - Ravivarma, Painter - Werner von Siemens, Electromote Vehicle - Deadliest Cyclone - April 29

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "International Dance Day - Bharathidasan, Tamil Poet, Writer, Former MLA, Rationalist - Ravivarma, Painter - Werner von Siemens, Electromote Vehicle - Deadliest Cyclone."


சர்வதேச நடன தினம் - International Dance Day :

✒️International Committee of Dance, UNESCO and International Theater Institute have been celebrating this day since 1982 on 29th April. Also, the birthday of dancer Jean-Georges Noverre (April 29), is celebrated as International Dance Day.

✒️சர்வதேச நடன கமிட்டி, யுனெஸ்கோ மற்றும் சர்வதேச திரையரங்க நிறுவனம் ஆகியவை இணைந்து இத்தினத்தை 1982ஆம் ஆண்டுமுதல் ஏப்ரல் 29ஆம் தேதி கொண்டாடி வருகிறது. மேலும், ஜீன் ஜார்ஜ்ஸ் நோவீர் என்ற நடனக் கலைஞர் பிறந்த தினத்தை (ஏப்ரல் 29), சர்வதேச நடன தினமாக கொண்டாடப்படுகிறது. 


Bharathidasan - Renowned Writer

பாவேந்தர் பாரதிதாசன் - Bharathidasan - Tamil Poet - Writer - Former MLA - Rationalist (whose literary works mostly handled socio-political issues) :

✒️Pavendar Bharathidasan, one of the greatest Tamil poets, was born on April 29, 1891 in Puducherry. His original name was Kanaka Subburathinam. He entered the film industry in the year 1937 and made his mark in all fields like story, screenplay, dialogue, song and film production. He does not like others to correct his writings. He changed the text books from a - squirrel to a - mother (Aa - Anil to Aa - Amma). Ilakiya Kolamgal (Literary Kolams), Ilaignar Ilakiyam (Youth Literature), Kudumba Vilakku (Family Lamp), Pandian Parisu (Pandian Prize), Irunda Veedu (Dark House), Azhagin Sirippu (Beauty's Laughter), Kumaraguruparar etc. are his major works. He was elected as a member of Puducherry Legislative Assembly in 1954. In 1969, he received the Sahitya Akademi Award for his play Pisiranthaiyar. Bharathidasan, who was known as Revolutionary Poet and Pavendar for his evocative writing. Such a great literarian was passed away on 21st April 1964.

✒️தலைசிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி புதுச்சேரியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். 1937ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த இவர் கதை, திரைக்கதை, வசனம், பாடல், படத்தயாரிப்பு என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார். தான் எழுதியதில் மற்றவர்கள் திருத்தம் செய்வதை விரும்பாதவர். பாடப் புத்தகங்களில் அ - அணில் என்று இருந்ததை, அ - அம்மா என்று மாற்றியவர். இலக்கியக் கோலங்கள், இளைஞர் இலக்கியம், குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, குமரகுருபரர் போன்றவை இவரது முக்கியப் படைப்புகள் ஆகும். இவர் 1954ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு இவரது பிசிராந்தையார் நாடகத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. தம் எழுச்சிமிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்ட பாரதிதாசன் 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 21ந் தேதி மறைந்தார்.


👉Click here to buy   Bharathidasan's Collections


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1848ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி காலத்தால் அழியாத பல ஓவியங்களை படைத்த ஓவியர் ராஜா ரவிவர்மா பிறந்தார் - On April 29, 1848, Painter Raja Ravivarma, who created many timeless paintings, was born.


🌟1882ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி பெர்லினில் வெர்னர் வான் சீமென்ஸ் என்பவரால் எலக்ட்ரோமோட் வாகனம் சோதனை செய்யப்பட்டது - The electromote vehicle was tested by Werner von Siemens on 29 April 1882 in Berlin.


🌟1991ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக மோசமான வெப்பமண்டல சூறாவளிகளில் ஒன்று வங்காளதேசத்தில் உள்ள சிட்டகாங் பகுதியில் தாக்கியது, சுமார் 140,000 பேர் இறந்தனர் - On 29th April 1991, one of the deadliest tropical cyclones ever recorded was hit the Chittagong region in bangladesh, around 140,000 people were died.


🖋I hope you may have learned little things about the following;

International Dance Day - Bharathidasan, Tamil Poet, Writer, Former MLA, Rationalist - Ravivarma, Painter - Werner von Siemens, Electromote Vehicle - Deadliest Cyclone.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog