An Overview about today's world history...
Dian Fossey - Conservationist |
டயேன் ஃபாசி - Dian Fossey - American Primatologist and Conservationist :
✒️American zoologist Dian Fossey was born on January 16, 1932 in California. She lived with gorillas in the African country of Rwanda for a long time and compiled detailed notes about gorillas. She encouraged by the famous biologist Louis Leakey and studied gorillas. Her studies were as pioneering as Jane Goodall's rare study of chimpanzees. She passed away on 26th December, 1985.
- அமெரிக்க விலங்கியலாளர் டயேன் ஃபாசி 1932ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி கலிபோர்னியாவில் பிறந்தார்.
- இவர் நீண்டகாலமாக ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டா நாட்டில் கொரில்லாக்களோடு வாழ்ந்து, கொரில்லாவை பற்றிய நுணுக்கமான குறிப்புகளைத் தொகுத்து வந்தார்.
- புகழ்பெற்ற உயிரின ஆய்வாளராகிய லூயி லீக்கி என்பவரால் ஊக்குவிக்கப்பட்டு இவர் கொரில்லாவை பற்றிய ஆய்வுகளை செய்து வந்தார். இவருடைய ஆய்வுகள் ஜேன் குட்டால், சிம்பன்சி பற்றி நடத்திய அரிய ஆய்வைப்போல முதன்மையானது. இவர் 1985ஆம் ஆண்டு டிசம்பர் 26ந் தேதி மறைந்தார்.
ஆனந்தரங்கம் பிள்ளை - Ananda Ranga Pillai ( Worked as a dubash in the service of the French East India Company & famous for his set of private diaries from the years 1736 to 1761 which portray life in 18th century India) :
✒️Today is Ananda Ranga Pillai's memorial day!
✒️Ananda Ranga Pillai, who recorded history through his diary, was born on March 30, 1709 in Perambur, Chennai. He used to do many jobs. He is in the habit of jotting down daily happenings in the country. Proficient in many languages, he acted as a bridge between the Indian kings and the French. He kept writing a diary for almost 25 years. His diary is an important historical record of 18th century social changes, political events, victories and defeats of French forces, Persian invasion of Delhi, harsh punishments given to criminals, maritime trade, foreign travelers to India. After 85 years of his demise, his diaries were found. He died on January 16, 1761, compared to the famous English diarist Samuel Pepys, who was the pioneer of the world diary movement, and was hailed as the "Pepys of India" and the chancellor of diaries.
- இன்று இவரின் நினைவு தினம்!
- நாட்குறிப்பு மூலம் வரலாற்றை பதிவு செய்தவரான ஆனந்தரங்கம் பிள்ளை 1709ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பிறந்தார்.
- இவர் பல தொழில்களை செய்து வந்தார். தினசரி நடக்கும் நாட்டு நிகழ்வுகளைக் குறிப்புகளாக எழுதிவைக்கும் பழக்கம் கொண்டவர். பல மொழிகளில் புலமை கொண்ட இவர் இந்திய மன்னர்கள், பிரெஞ்சுக்காரர்கள் இடையே பாலமாக விளங்கினார்.
- ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் நாட்குறிப்பு எழுதியுள்ளார். 18-ம் நூற்றாண்டின் சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள், பிரெஞ்சுப் படையின் வெற்றி, தோல்விகள், டெல்லி மீதான பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட கடும் தண்டனைகள், கடல் வணிகம், இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் விவரம் உட்பட பல நிகழ்வுகளின் முக்கிய வரலாற்றுப் பதிவாக இவரது நாட்குறிப்பு திகழ்கிறது.
- இவர் மறைந்து 85 ஆண்டுகளுக்குப் பிறகே இவரது நாட்குறிப்புகள் கிடைத்தன. உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியாகப் புகழ்பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீஸஷுடன் (Samuel Pepys) ஒப்பிடப்பட்டு, 'இந்தியாவின் பெப்பீஸ்" எனவும், நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்பட்ட இவர் 1761ஆம் ஆண்டு ஜனவரி 16ந் தேதி மறைந்தார்.
👉Click here to buy Ananda Ranga Pillai Collections.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟இந்தியாவின் கருந்துளை மனிதன், விஞ்ஞானி, ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டால் ஈர்க்கப்பட்ட, சி.வி.விஸ்வேஸ்வரா, 2017 ஜனவரி 16 அன்று காலமானார் - The 'black hole man of India, scientist, C.V.Vishveshwara, attracted to the Einstein’s theory of general relativity, was passed away on 16th January 2017.
🌟கொலம்பியா விண்கலம் தனது கடைசிப் பயணத்தை 2003ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி ஆரம்பித்தது - Space Shuttle Columbia began its final mission on January 16, 2003.
🌟மானுடவியல் ஆராய்ச்சியாளர் எஸ்.ஜே.தம்பையா 1929 ஆம் ஆண்டு ஜனவரி 16 அன்று பிறந்தார் - Anthropology researcher S.J.Tambiah was born on 16th January 1929.
🌟 1938ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி இந்திய எழுத்தாளர் சரத்சந்திர சட்டோபாத்யாயா மறைந்தார் - Indian writer Sarat Chandra Chattopadhyay passed away on 16th January 1938.
👉Click here to buy Sarat Chandra Chattopadhyay Collections.
🌟 வான் டி கிராஃப் ஜெனரேட்டரின் வடிவமைப்பாளரும் மேம்பாட்டாளருமான ராபர்ட் வான் டி கிராஃப் ஜனவரி 16, 1967 அன்று காலமானார் - The designer and developer of the Van de Graaff Generator, Robert Van de Graaff was passed away on 16th January 1967.
👉Click here to buy Best Sellers in Books.
👇My Other Blogs:
https://law-worldhistory.blogspot.com
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
email: christothomasnoble@gmail.com
Comments
Post a Comment