Today World History - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Subhas Chandra Bose - ஹிடேகி யுகாவா - Hideki Yukawa - ராமானுஜ ஐயங்கார் - Ramanuja Iyengar - ஜாவா - Java - 23 January

An Overview about today's world history...


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Subhas Chandra Bose - Great Indian Freedom Fighter and Leader :

✒️The Revolutionary warrior Netaji Subhash Chandra Bose who fought tirelessly for the freedom of India, was born on January 23, 1897 in Cuttack, Odisha. A devotee of spirituality, who was wandering in search of a guru, joined the college as he could not find a guru. He was expelled from the college because of a fight with the professor there. Later he joined the college, studied ICS (Indian Civil Services) and was working in London. He gave up the job because he didn't want to work with the British who kept the country enslaved. He left that job and joined the freedom struggle. In 1941, he formed the Center for Independent India, established a radio station called Azad hind, set up a separate flag for the country, and declared Jana Gana Mana as the national anthem. Netaji created the Indian National Army and created a separate unit for women and named it the Jhansi Rani Force. Indian revolutionary hero Subhash Chandra Bose is said to have died on 18th August 1945.

  • இந்திய சுதந்திரத்தை தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு அயராது பாடுபட்ட புரட்சி வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஒரிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்தார்.

  • ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தவர், குரு கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே ஆசிரியருடன் சண்டை ஏற்பட்டு கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். 

  • பின்பு சி.ஆர்.தாஸ் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து ஐ.சி.எஸ். (Indian Civil Services) பட்டம் பெற்று, லண்டனில் வேலை பார்த்து கொண்டிருந்தார். நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தில் அந்தப் பதவியை துறந்தார். அந்த வேலையை விட்டு விட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

  • இவர் 1941ஆம் ஆண்டு சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத் ஹிந்த் என்ற ரேடியோ மையத்தை நிறுவி, நாட்டுக்கெனத் தனிக்கொடியை அமைத்து, ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

  • இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, பெண்களுக்கென தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்கு ஜான்சி ராணிப் படை என்று பெயரிட்டார். இந்திய புரட்சி நாயகர் சுபாஷ் சந்திர போஸ் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ந் தேதி மறைந்தார் (ஜப்பானை சேர்ந்த படை விமானம் மிட்சுபிஷி கி -21 விபத்திற்குள்ளானதாகவும், அதில் பயனித்த நேதாஜி பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயரிழந்ததாகவும் கூறப்படுகிறது).


Hideki Yukawa - Physicist

ஹிடேகி யுகாவா - Hideki Yukawa - Japanese Theoretical Physicist -  First Japanese Nobel Laureate :

✒️Hideki Yukawa, the first Japanese Nobel laureate, was born on January 23, 1907 in Tokyo, Japan. He researched and published a report on the internal interactions between elementary particles, explaining the new field principle for the nuclear force, and noted the emergence of the substance 'Meson'. He also developed the meson theory of nuclear forces. He discovered a proof particle many times heavier than an electron that creates the strong nuclear force in the nucleus. For this he received the Nobel Prize in Physics in 1949. The great theoretical physicist Hideki Yukawa died on September 8, 1981.

  • முதன்முதலாக ஜப்பானுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தவரான ஹிடேகி யுகாவா 1907ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிறந்தார்.

  • இவர் ஆதாரத் துகள்களுக்கு இடையே ஏற்படும் உள்வினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டு, அதில் அணுக்கரு விசைக்கான புதிய புலக் கொள்கையை விளக்கி, 'மீஸான்" (Meson) என்ற பொருள் வெளிப்படுவதை குறிப்பிட்டார். 

  • மேலும் இவர் அணுக்கரு ஆற்றல்களின் மீஸான் கோட்பாட்டை உருவாக்கினார். அணுக்கருவில் ஏற்படும் வலிமைமிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் எலக்ட்ரானைவிட பன்மடங்கு கனமான ஆதாரத் துகளைக் கண்டறிந்தார். இதற்காக இவருக்கு 1949ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. 

  • தலைசிறந்த கோட்பாட்டு இயற்பியல் அறிஞரான ஹிடேகி யுகாவா 1981ஆம் ஆண்டு செப்டம்பர் 8ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 ஷாங்க்சி பூகம்பம், வரலாற்றில் மிக மோசமான நிலநடுக்கம் ஜனவரி 23, 1556 அன்று, சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்டது, இறப்பு எண்ணிக்கை 8,30,000 இருந்தது என்று கருதப்பட்ட பூகம்பம் - The Shaanxi earthquake, the worst earthquake in history, occurred on January 23, 1556, in Shaanxi Province, China, with an estimated death toll of 8,30,000.


🌟 1967ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி கர்நாடக இசை வித்வான் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் மறைந்தார் - Carnatic musician Ariyakudi Ramanuja Iyengar passed away on January 23, 1967.


🌟 1996ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஜாவா நிரலாக்க மொழியின் முதற்பதிப்பு வெளியானது - The first version of the Java programming language was released on January 23, 1996.


👉Click here to buy Best Sellers in Books.


👇My Other Blogs:

https://law-worldhistory.blogspot.com


- Have a nice day 🌹

- C.Thomas Noble.

email: christothomasnoble@gmail.com

Comments