Today World History -குமாரசுவாமி புலவர் - Chunnakam Kumaraswamy Pulavar - First aircraft landed on a ship - N.T.Rama Rao - 18 January
An overview about today's world history...
Chunnakam Kumaraswamy Pulavar - Scholar |
குமாரசுவாமி புலவர் - Chunnakam Kumaraswamy Pulavar - Tamil Scholar and Poet :
✒️Tamil scholar A.Kumaraswamy Pulavar, who worked for the development of Tamil literature, was born on January 18, 1854 in a town called Chunnagam, next to Jaffna, Sri Lanka. He was taught by Kulaguru Vedaranyam Namasivaya Desikar at the age of 5. He also studied Neethi books, Yapperungalakarigai, Tholkappiyam etc. He was known as 'Pulavar' because he was skilled in singing poetry, writing essays and delivering speeches. Arumuga Navalar's Vannarpannai Saiva Prakasa Vidyalaya was appointed him as Headmaster. He worked there all his life and developed the institution into a higher education institution due to his initiative. In 1913, he was given the responsibility of researching and editing the Tamil dictionary prepared under the leadership of priest Chandler on behalf of the Madras provincial government. All the corrections he made were included in it. Nagula Malai Kuravanji Natakam, Aasaarakovai, Nanmanikkadigai, Aathichoody Venba, Sivasetram Vilakkam, Urichonikandu etc. have been reviewed and published by him. Kumaraswamy Pulavar, who was versatile as a teacher, poet, essayist and religious speaker, passed away on 22nd March 1922.
- தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழ் அறிஞர் அ.குமாரசுவாமி புலவர் 1854ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி இலங்கையின் யாழ்ப்பாணம் அடுத்த சுண்ணாகம் என்ற ஊரில் பிறந்தார்.
- இவர் தன்னுடைய 5 வயதில் குலகுரு வேதாரண்யம் நமசிவாய தேசிகரிடம் ஏட்டுக்கல்வி கற்றார். மேலும் இவர் நீதி நூல்கள், யாப்பருங்கலக்காரிகை, தொல்காப்பியம் போன்றவற்றை கற்றுத் தேர்ந்தார். கவிப் பாடுவது, கட்டுரை எழுதுவது, சொற்பொழிவு நிகழ்த்துவதிலும் திறமை பெற்றிருந்ததால், 'புலவர்" என்று அழைக்கப்பட்டார்.
- ஆறுமுக நாவலரின் வண்ணார்ப்பண்ணை சைவப் பிரகாச வித்யாலயத்தில் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். வாழ்நாள் முழுவதும் அங்கு பணியாற்றினார். இவரது முனைப்பால் உயர்கல்வி நிறுவனமாக இது வளர்ச்சி அடைந்தது.
- 1913ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசு சார்பில் பாதிரியார் சாண்டிலர் தலைமையில் தயாரிக்கப்பட்ட தமிழ் அகராதியை ஆராய்ந்து, திருத்தும் பொறுப்பை இவரிடம் வழங்கப்பட்டது. இவர் கூறிய அனைத்து திருத்தங்களும் அதில் சேர்க்கப்பட்டன.
- நகுலமலைக் குறவஞ்சி நாடகம், ஆசாரக்கோவை, நான்மணிக்கடிகை, ஆத்திச்சூடி வெண்பா, சிவசேத்திரம் விளக்கம், உரிச் சொனிகண்டு உள்ளிட்டவற்றை திருத்த உரையுடன் திறனாய்வு செய்து பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
- ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், சமயச் சொற்பொழிவாளர் என பன்முகத் திறன் கொண்ட குமாரசுவாமி புலவர் 1922ஆம் ஆண்டு மார்ச் 22ந் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟சமூக சீர்திருத்தவாதி, அரசியல் தலைவர், தமிழக கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிச இயக்கங்களின் முன்னோடிகளில் ஒருவரான ப.ஜீவானந்தம் 1963 ஜனவரி 18 அன்று காலமானார் - P.Jeevanandham, a social reformer, political leader, and one of the pioneers of communist and socialist movements in the state of Tamil Nadu, died on 18 January 1963.
🌟அபர்ணா போபட் இந்தியாவின் சிறந்த பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவர். அவர் 1998 பிரெஞ்சு சர்வதேச மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றார். அவர் 2005 இல் 'அர்ஜுனா விருது' பெற்றார். அப்படிப்பட்ட ஒரு சிறந்த சாம்பியன் இன்று (18 ஜனவரி 1978 ஆம் ஆண்டு) மகாராஷ்டிராவின் மும்பையில் பிறந்தார் - Aparna Popat is one of the best badminton players in India. She won the 1998 French International Women's Singles title. She received the 'Arjuna Award' in 2005. Such a great champion was born today (18th January 1978) in Mumbai, Maharashtra.
🌟 1911ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த USS பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானம் இதுவாகும் - On January 18, 1911, Eugene Eli landed his plane aboard the USS Pennsylvania in the harbor of San Francisco. It was the first aircraft to land on a ship.
🌟 1996ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் மறைந்தார் - Former Andhra Pradesh Chief Minister & Actor N.T.Rama Rao passed away on January 18, 1996.
🌟புகழ்பெற்ற ஆங்கிலேய எழுத்தாளரும், நோபல் பரிசு பெற்றவருமான, ரட்யார்ட் கிப்ளிங்,18 ஜனவரி 1936 ஆம் ஆண்டு மறைந்தார் - Rudyard Kipling, the famous English writer and Nobel laureate, died on 18 January 1936.
👉Click here to buyRudyard Kipling Collections
🌟ஜனவரி 18, 2006 அன்று, கருணைக்கொலை அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது - On 18th January 2006, Euthanasia was ratified by the Supreme Court in the United States.
👉Click here to buy Best Sellers in Books.
👇My Other Blogs:
https://law-worldhistory.blogspot.com
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
email: christothomasnoble@gmail.com
Comments
Post a Comment