Swami Vivekananda, Monk - Gulzarilal Nanda, Former Prime Minister of India - Giuseppe Garibaldi, Italian Revolutionary - America's Independence Day - First Long-Distance Train Service - Marie Curie, Physicist - Pingali Venkayya, Designer - Tidel Park - July 4

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today. 

It's might be about, Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Swami Vivekananda, Monk - Gulzarilal Nanda, Former Prime Minister of India - Giuseppe Garibaldi, Italian Revolutionary - America's Independence Day - First Long-Distance Train Service - Marie Curie, Physicist - Pingali Venkayya, Designer - Tidel Park."


சுவாமி விவேகானந்தர் - Swami Vivekananda - Monk - Philosopher - Author :

✒️இவரின் நினைவு தினம் இன்று!

✒️இளைஞர்களின் முன்னோடி சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.‌ இவர் பிறந்த தினமான ஜனவரி 12ஆம் தேதியை இந்திய அரசு 1984ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது. இவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்' மற்றும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்' போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியர்களுக்கு மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையை விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது. 1893ஆம் ஆண்டு சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையை தொடங்குவதற்கு முன், 'அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!' என்று ஆரம்பித்தார். சுவாமி விவேகானந்தர் இங்கிலாந்துக்கும் சென்றார். அங்கே பல மக்கள் இவருக்கு சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர், 'சகோதரி நிவேதிதா'. இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்த இவர் தன்னுடைய 39வது வயதில் 1902ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி காலமானார்.

https://lawviasnippets.blogspot.com/2023/01/swami-vivekananda-monk-philosopher-disciple-of-ramakrishna-national-youth-day-bhagwan-das-indian-theosophist-freedom-fighter-first-radio-message-nigerian-civil-war-haiti-earthquake-january-12.html


👉Click here to buy; Swami Vivekananda Collections


Gulzarilal Nanda - Former Prime Minister of India

குல்சாரிலால் நந்தா - Gulzarilal Nanda - Former Prime Minister of India - Economist :

✒️ இந்தியாவின் முன்னாள் பிரதமரும், விடுதலைப் போராட்ட வீரருமான குல்சாரிலால் நந்தா 1898ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி பஞ்சாப் மாகாணத்திலுள்ள சியால்கோட் என்னுமிடத்தில் பிறந்தார். இவர் இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார். 1964ல் ஜவஹர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும், 1966-ல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார். இவர் காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் காந்தியவாதி ஆவார். இந்திய அரசு இவருக்கு 1997ல் பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவித்தது. இந்திய அரசியல்வாதியும், தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞருமான இவர் 1998ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4ந் தேதி தனது 99வது வயதில் மறைந்தார்.


கரிபால்டி - Giuseppe Garibaldi - Italian Revolutionary :

✒️புதிய இத்தாலியின் தந்தையான கரிபால்டி 1807ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி பிரான்ஸின் நைஸ் நகரில் பிறந்தார். இவர் ஒருங்கிணைந்த இத்தாலியை உருவாக்கும் இயக்கத்தில் இணைந்து போராடினார். இத்தாலியில் இவர் உருவாக்கிய தொண்டர் படையின் புகழ், உலகம் முழுவதும் பரவியது. இவரது தலைமையில் ஆஸ்திரியா, வெர்சி, கோமோ ஆகிய பல இடங்கள் கைப்பற்றப்பட்டன. மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய இவர் ஒருபோதும் பதவிக்காகப் போராடியதில்லை. ராணுவப் புரட்சிகளில் முக்கியப் பங்காற்றியதால் 'ஹீரோ ஆஃப் டூ வேர்ல்ட்ஸ்' (Hero of the Two Worlds) என்று போற்றப்பட்டார். அசாதாரண ராணுவத்திறன், வீரம், முடிவெடுக்கும் ஆற்றல், செயல்திட்டம் என அனைத்தும் ஒருங்கே பெற்ற கரிபால்டி 1882ஆம் ஆண்டு ஜுன் 2ந் தேதி தனது 74வது வயதில் மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள்- Other Events :


🌟அமெரிக்காவின் சுதந்திர தினம், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து அமெரிக்கா 1776ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4ஆம் நாள் விடுதலை அடைந்தது - America's Independence Day: America got its freedom from British rule on July 4th, 1776.


🌟உலகின் முதலாவது அதி தூர தொடர்வண்டிப் போக்குவரத்து, பர்மிங்காம், லிவர்பூல் நகர்களுக்கிடையே 1837 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தொடங்கப்பட்டது - The world's first long-distance train service was started on 4th July 1837 between Birmingham and Liverpool.


🌟1934ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி ரேடியத்தை கண்டுபிடித்த மேரி கியூரி மறைந்தார் - Marie Curie, the discoverer of radium, died on July 4, 1934.


🌟பிங்கலி வெங்கையா, இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர், 1963ஆம் ஆண்டு ஜுலை 4ந் தேதி, மறைந்தார் - Pingali Venkayya, designer of the Indian National Flag, passed away on 4th July 1963.


🌟சென்னை தரமணியில் உள்ள டைடல் பார்க் 2000 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி திறக்கப்பட்டது - Tidel Park at Taramani, Chennai was opened on 4th July 2000.


🖋I hope you may have learned little things about the following;

Swami Vivekananda, Monk - Gulzarilal Nanda, Former Prime Minister of India - Giuseppe Garibaldi, Italian Revolutionary - America's Independence Day - First Long-Distance Train Service - Marie Curie, Physicist - Pingali Venkayya, Designer - Tidel Park.


  👇My Other Blogs:

https://law-worldhistory.blogspot.com


- Have a nice day 🌹

- C.Thomas Noble

Comments

Popular posts from this blog