International Animation Day - Bill Gates (William Henry Gates III), American Business Magnate, Software Developer, Investor, Author, Philanthropist - Sister Nivedita, Irish Teacher, Author, Social Activist, School Founder, Disciple of Swami Vivekananda - Friedrich Max Muller, German linguist - Airbus A300 - Mysore V.Duraisamy, Musician - October 28

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "International Animation Day - Bill Gates (William Henry Gates III), American Business Magnate, Software Developer, Investor, Author, Philanthropist - Sister Nivedita, Irish Teacher, Author, Social Activist, School Founder, Disciple of Swami Vivekananda - Friedrich Max Muller, German linguist - Airbus A300 - Mysore V.Duraisamy, Musician."


சர்வதேச அனிமேஷன் தினம் - International Animation Day :

✒️International Animation Day is observed on 28th October. The day is celebrated to promote the films made in animation technology and the employees working in this sector. Further, The International Animated Film Association (ASIFA) introduced this day in 2002 to commemorate the first screening of an animated film by Charles-Emile Reynaud in one of the Grevin Museum theater in 1892.

  • சர்வதேச அனிமேஷன் தினம் அக்டோபர் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக 'சர்வதேச அனிமேஷன் தினம்" கொண்டாடப்படுகிறது.

  • 1892ஆம் ஆண்டு சார்லஸ் எமிலி ரெனால்ட் என்பவர் முதன்முதலில் கிரெவின் மியூசியத் திரையரங்கு ஒன்றில் அனிமேஷன் திரைப்படத்தை திரையிட்டதை நினைவுக்கூறும் விதமாக, சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம் (International Animated Film Association- ASIFA), 2002ஆம் ஆண்டு இந்நாளை அறிமுகப்படுத்தியது.


பில்கேட்ஸ் - Bill Gates (William Henry Gates III) - American Business Magnate - Software Developer - Investor - Author - Philanthropist :

✒️Bill Gates, the founder of Microsoft, a computer software expert, was born on October 28, 1955 in the city of Seattle in the United States. He continues to be one of the richest people in the world. He is the one who introduced MS-DOS operating system for IBM computers in 1981. In 1995, he co-authored the book 'The Road Ahead' with Nathan Myhrwald, a special technical officer at Microsoft, and journalist Peter Rinearson. In 1999, he published the book 'Business @ the Speed ​​of Thought'.

  • மைக்ரோசாப்ட் நிறுவனர், கணிப்பொறி மென்பொருள் வல்லுநர் பில்கேட்ஸ் 1955ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அமெரிக்காவில் சியாட்டில் என்ற நகரில் பிறந்தார்.

  • இவர் உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறார். 1981ஆம் ஆண்டு IBM  கணினிகளுக்காக MS-DOS என்ற இயங்குதளத்தை (Operating System) அறிமுகம் செய்தவர் இவர் தான்.

  • 1995ஆம் ஆண்டு வெளியான 'தி ரோடு அஹெட்" (The Road Ahead) என்ற புத்தகத்தை இவருடன் சேர்ந்து மைக்ரோசாப்ட்டின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலரான நாதன் முர்வால்டும், பீட்டர் ரிநீர்சன் என்ற பத்திரிக்கையாளரும் எழுதியுள்ளனர். 1999ஆம் ஆண்டு 'பிசினஸ் அட் தி ஸ்பீட் ஆப் தாட்" (Business @ the Speed ​​of Thought) என்ற நூலை வெளியிட்டார்.
👉Click here to buy Bill Gates Collections  


Sister Nivedita - Social Activist

சகோதரி நிவேதிதா - Sister Nivedita - Irish Teacher - Author - Social Activist - School Founder - Disciple of Swami Vivekananda :

✒️Swami Vivekananda's foremost disciple and social worker, Sister Nivedita was born on 28th October, 1867 in Ireland. Her birth name was Margaret Elizabeth Noble. Once she heard a speech by Swami Vivekananda at a friend's house. Fascinated by it, she started listening to his talks frequently. She decided that he was her guru. Once Vivekananda, who was talking about the condition of Indian women, said, 'I hope you can help the women of our country to get an education.' At a time when Vande Mataram was not recognized as a national anthem, she had it sung as a morning song in his school. Bharatiyar mentioned her as his guru who was the catalyst for fighting for women's rights. Sister Nivedita died on October 13, 1911.

  • சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும், சமூக சேவகியுமான சகோதரி நிவேதிதா 1867ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அயர்லாந்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள்.

  • ஒருமுறை தோழியின் வீட்டில் சுவாமி விவேகானந்தரின் உரையைக் கேட்டார். அதில் கவரப்பட்டவர், அவரது பேச்சுக்களை அடிக்கடி கேட்கத் தொடங்கினார். அவர்தான் தன் குரு என்று தீர்மானித்தார்.

  • ஒரு சமயம் இந்தியப் பெண்களின் நிலை பற்றி பேசிக் கொண்டிருந்த விவேகானந்தர், 'எங்கள் தேசத்துப் பெண்கள் கல்வி பெற நீ உதவ முடியும் என நம்புகிறேன்" என்றார். இதை அரிய வாய்ப்பாகக் கருதியவர், உடனே புறப்பட்டு இந்தியா வந்தார்.

  • வந்தே மாதரம் தேசியப் பாடலாக அங்கீகரிக்கப்படாத காலக்கட்டத்திலேயே அதை தன் பள்ளியில் காலை வணக்கப் பாடலாகப் பாடச் செய்தார். பெண் உரிமைக்காகப் போராடத் தூண்டுகோலாக இருந்த இவரை தன் குருவாக குறிப்பிட்டுள்ளார் பாரதியார். சகோதரி நிவேதிதா 1911ஆம் ஆண்டு அக்டோபர் 13ந் தேதி மறைந்தார்.

👉Click here to buy Sister Nivedita Collections  


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1900ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி இந்தியாவின் வேத உபநிடதங்கள் பற்றி ஆராய்ச்சி செய்த ஜெர்மனி மொழியியலாளர் பிரெட்ரிக் மாக்ஸ் முல்லர் மறைந்தார் - The German linguist Friedrich Max Muller, who researched the Vedic Upanishads in India, died on October 28, 1900.


🌟 1972ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி முதலாவது ஏர்பஸ் ஏ300 பறக்க விடப்பட்டது - The first Airbus A300 was launched on October 28, 1972.


🌟 1997ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி இறுதிவரை இசைத் தொண்டாற்றி வந்த இசைக்கலைஞர் மைசூர் வி.துரைசுவாமி மறைந்தார் - Mysore V.Duraisamy, a musician who volunteered till the end of October 28, 1997, has passed away.


🖋I hope you may have learned little things about the following;

International Animation Day - Bill Gates (William Henry Gates III), American Business Magnate, Software Developer, Investor, Author, Philanthropist - Sister Nivedita, Irish Teacher, Author, Social Activist, School Founder, Disciple of Swami Vivekananda - Friedrich Max Muller, German linguist - Airbus A300 - Mysore V.Duraisamy, Musician.

👉Click here to buy Best Sellers in Books


👇My Other Blogs:


🌟https://spanishviatamil.blogspot.com

🌟 https://law-worldhistory.blogspot.com


- Have a nice day🌹

- C.Thomas Noble

Comments