World Book and Copyright Day - William Shakespeare, English Playwright, Poet, Actor - S.Janaki, Renowned Singer - Fort St.George - First World Tamil Conference - April 23
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "World Book and Copyright Day - William Shakespeare, English Playwright, Poet, Actor - S.Janaki, Renowned Singer - Fort St.George - First World Tamil Conference."
உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம் - World Book and Copyright Day :
✒️UNESCO celebrates 23rd April every year as World Book and Copyright Day to protect and promote intellectual property such as reading, publishing and copyright. It was announced in 1995 when the General Conference of UNESCO was held in Paris.
✒️வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமை போன்ற அறிவுசார் சொத்துக்களான இவற்றை பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்கத்துடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் தேதியை உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக கொண்டாடுகிறது. யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்றபோது இத்தினம் அறிவிக்கப்பட்டது.
வில்லியம் ஷேக்ஸ்பியர் - William Shakespeare - English Playwright - Poet - Actor :
✒️Today is his memorial day!
✒️William Shakespeare, the creator of the timeless Romeo and Juliet, was born on April 26, 1564 in London. It was the plague that raged when he was in London that caused him to create many immortal epics. He wrote a total of more than 30 plays in his 24-year literary career. A Midsummer Night's Dream‚ As You Like It‚ The Taming of the Shrew‚ The Merchant of Venice‚ Romeo and Juliet‚ Hamlet‚ Othello‚ King Lear‚ Julius Caesar‚ Antony and Cleopatra are some of his famous plays. He died on April 23, 1616, who gave us works that are still living among us today.
✒️இன்று இவரின் நினைவு தினம் !
✒️எத்தனையோ மொழிகளில் எத்தனையோ இலக்கியங்கள் வந்தாலும் காலத்தால் அழியாமல் நிற்கும் ரோமியோ ஜூலியட்டை படைத்த வில்லியம் ஷேக்ஸ்பியர் 1564ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி லண்டனில் பிறந்தார். இவர் லண்டனில் இருந்தபோது அலைக்கழித்த அந்த பிளேக் நோய்தான் பல அமரக் காவியங்களை படைக்க காரணம். 24 ஆண்டு இலக்கியப் பணியில் மொத்தம் 30க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார். எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம், அஸ் யு லைக் இட், த டேமிங் ஆப் த ஸ்ருவ், த மெர்ச்சென்ட் ஆப் வெனிஸ், ரோமியோ அண்ட் ஜுலியட், ஒதல்லோ, கிங் லியர், ஜுலியஸ் சீசர், அண்டனி அண்ட் கிளியோபாட்ரா (A Midsummer Night's Dream‚ As You Like It‚ The Taming of the Shrew‚ The Merchant of Venice‚ Romeo and Juliet‚ Hamlet‚ Othello‚ King Lear‚ Julius Caesar‚ Antony and Cleopatra) போன்றவை இவரது புகழ்பெற்ற நாடகங்கள். இன்றும் உயிரோவியங்களாக நம்மிடையே உலா வரும் படைப்புகளை தந்த இவர் 1616ஆம் ஆண்டு ஏப்ரல் 23ந் தேதி மறைந்தார்.
👉Click here to buy William Shakespeare Collections.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி வசீகர குரல் கொண்டவரும், புகழ்பெற்ற திரைப்படப் பாடகியுமான எஸ்.ஜானகி ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் பிறந்தார் - On April 23, 1938, S.Janaki, a famous film singer with a charming voice, was born in pallapatla, Guntur District, Andhra Pradesh.
🌟 1644ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டை சென்னையில் கட்டப்பட்டது - Fort St.George was built in Chennai on 23rd April 1644.
🌟 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி முதலாம் உலக தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது - The First World Tamil Conference concluded on April 23, 1966 in Kuala lampur.
🌟The Payment of Wages Act, 1936 : It was enacted on 23rd April 1936 & came into force on 28th April 1937, to regulate the payment of wages of certain classes of employed persons.
🌟The Industrial Employment (Standing Orders) Act, 1946 : It was enacted & enforced on 23rd April 1946, to require employers in industrial establishments formally to define conditions of employment under them.
🌟The Parsi Marriage and Divorce Act, 1936 : It was enacted on 23rd April 1936 & came into force on 22nd June 1936, to amend the law relating to marriage and divorce among Parsis.
🖋I hope you may have learned little things about the following;
World Book and Copyright Day - William Shakespeare, English Playwright, Poet, Actor - S.Janaki, Renowned Singer - Fort St.George - First World Tamil Conference.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment