Today’s World History - Arthritis - Elmer Ambrose Sperry Sr - 12th October

Elmer Ambrose Sperry


An Overview about today's world history :

உலக ஆர்த்ரிடிஸ் தினம் - World Arthritis Day :

  • 1996ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 12ஆம் தேதியை சர்வதேச மூட்டு அழற்சி நோய் தினம் (அ) உலக ஆர்த்ரிடிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • இத்தினம் கீல்வாதம் மற்றும் தசை நோய்கள் (RMDs) பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.
  • நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை சமூக வலைதளங்களின் மூலம் பராமரிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிப்பது இத்தினத்தின் நோக்கமாகும்.

எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி - Elmer Ambrose Sperry - American inventor - entrepreneur :

  • கப்பல்களில் பயன்படும் சுழிதிசைகாட்டியை (gyrocompass) கண்டறிந்த எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி 1860ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.
  • இவர் ஜப்பானீஸ் நிறுவனங்கள் மற்றும் ஜப்பானீஸ் அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார்.
  • அமெரிக்க கண்டுபிடிப்பாளரான எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி 1930ஆம் ஆண்டு நியூயார்க்கில் மறைந்தார்.

மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1918ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி இந்திய தொழிலதிபர் கிருஷ்ண குமார் பிர்லா (கே.கே.பிர்லா) பிறந்தார் - Indian businessman Krishna Kumar Birla (KK Birla) was born on October 12, 1918.


🌟 1964ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி சோவியத் ஒன்றியம் வஸ்கோத் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. அதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்கு கொண்டு சென்ற முதலாவது விண்கலம் ஆகும் - On October 12, 1964, the Soviet Union launched the Vascot 1 spacecraft. It was the first spacecraft to carry many astronauts into space.


🌟 1999ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி உலகின் மக்கள் தொகை 6 பில்லியனை எட்டியது - On October 12, 1999, the world's population reached 6 billion.


Have a nice day.

Comments

Popular posts from this blog