International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations and for the Dignity Victims - World Tuberculosis Day - Muthuswami Dikshitar, Poet, Singer, Veena Player - Coronavirus, India's Nationwide Lockdown - NASA's Ranger 9 Spacecraft - T.M.Soundararajan Famous Singer - March 24

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations and for the Dignity Victims - World Tuberculosis Day - Muthuswami Dikshitar, Poet, Singer, Veena Player - Coronavirus, India's Nationwide Lockdown - NASA's Ranger 9 Spacecraft - T.M.Soundararajan Famous Singer."


சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த தினம் - International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations and for the Dignity Victims :

✒️Archbishop Oscar Arnulfo Romero, who fought against human rights abuses and violence in El Salvador, was assassinated. In his memory, considering that, the UN Council announced in 2010 is that every year on March 24 was observed to remember those who lost their lives in the struggle to protect human rights and those who lost their lives due to violence.

✒️பேராயர் ஆஸ்கார் அருனள்போ ரோமிரோ (Archbishop Oscar Arnulfo Romero) அவர்கள் எல்சல்வடோரில் மனித உரிமை மீறல் மற்றும் வன்முறையை எதிர்த்து போராடியவர், படுகொலை செய்யப்பட்டார், அவரின் நினைவாக, அதனை கருத்தில்கொண்டு ஒவ்வொரு வருடமும் மார்ச் 24ந் தேதி  மனித உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களையும், வன்முறையால் உயிரிழந்தவர்களையும் நினைவுக்கூற இத்தினத்தை ஐ.நா.சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.


உலக காசநோய் தினம் - World Tuberculosis Day :

✒️Tuberculosis was discovered by Robert Koch on March 24, 1882. It is a deadly disease and the disease can be cured if it is detected earlier. Since 1996 onwards 'World Tuberculosis Day' has been observed on March 24 by the World Health Organization to raise awareness about tuberculosis.

✒️காசநோய் ஒரு தொற்றுநோய் என்பதை ராபர்டு கோச் என்பவர் 1882ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி கண்டுபிடித்தார். இது ஒரு உயிர்க்கொல்லி நோய். ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 1996ஆம் ஆண்டுமுதல் உலக காசநோய் தினம் மார்ச் 24ஆம் தேதி உலக சுகாதார அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.


Muthuswami Dikshitar - Composer

முத்துசுவாமி தீட்சிதர் - Muthuswami Dikshitar - South Indian Poet - Singer - Veena Player (A  Legendary Composer of Indian Classical Music, who is considered one of the Musical Trinity of Carnatic Music) :

✒️Regarded as one of the musical trinity, Muthuswami Dikshitar was born on March 24, 1775 in Tiruvarur. At an early age he learned all the Vedas, Shastras, Logic, Vyakarana and Kavya. He composed hymns on all the gods in Tiruvarur temple. He considered Muruga as his guru and composed kirtans in Tamil, Telugu and Sanskrit. He has composed hymns on Pancha Buddhas, Deities, Navagrahas, Punya Theerthas, Languages ​​and Maya. He has composed several kirtan collections including Navavarana Krithis, Panchalinga Sthala Kritis, Kamalamba Navavarana, Abhayamba Navavarana. He has composed kirtans in all 72 Melakarta ragas. It is said that in a drought-stricken village, Amritavarshini summoned rain by singing kirtan in raga. Thus he was hailed as the father of the Amritavarshini raga. Muthuswami Dikshitar, who sang kirtans even in rare, unused ragas, died on 21 October 1835.

✒️இசை மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் முத்துசுவாமி தீட்சிதர் 1775ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி திருவாரூரில் பிறந்தார். சிறுவயதிலேயே வேதம், சாஸ்திரம், தர்க்கம், வியாகரணம், காவியம் ஆகிய அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். திருவாரூர் கோவிலில் உள்ள அனைத்து கடவுள்கள் மீதும் பாடல் இயற்றியுள்ளார். இவர் முருகனையே தன் குருவாக நினைத்தார், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். பஞ்ச பூதங்கள், தெய்வங்கள், நவகிரகங்கள், புண்ணிய தீர்த்தங்கள், மொழிகள், மாயை குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார். நவாவர்ணக் கீர்த்தனைகள், பஞ்சலிங்க ஸ்தல கிருதிகள், கமலாம்பா நவாவர்ணம், அபயாம்பா நவாவர்ணம் உள்ளிட்ட பல கீர்த்தனைத் தொகுப்புகளை இயற்றியுள்ளார். இவர் 72 மேளகர்த்தா ராகங்களிலும் கீர்த்தனை இயற்றியுள்ளார். வறட்சி நிலவிய கிராமத்தில் அமிர்தவர்ஷினி ராகத்தில் கீர்த்தனை பாடி மழையை வரவழைத்தார் என்று கூறப்படுகிறது. இதனால் அமிர்தவர்ஷினி ராகத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். அரிதான, அதிகம் பயன்படுத்தப்படாத ராகங்களிலும்கூட கீர்த்தனைகள் பாடிய முத்துசுவாமி தீட்சிதர் 1835ஆம் ஆண்டு அக்டோபர் 21ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟2020ஆம் ஆண்டு, மார்ச் 24ந் தேதி, இந்தியாவில் கொரோனாவைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது - On March 24, 2020, a nationwide lockdown was imposed to prevent the spread of the coronavirus in India.


🌟 1988ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி கர்நாடக இசைப்பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் மறைந்தார் - On March 24, 1988, Sirkazhi S.Govindarajan, a renowned Carnatic music singer, passed away.


🌟 நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலமானது நிலவில் மோதும் முன்னர், நிலவின் புகைப்படங்களை 1965 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி பூமிக்கு அனுப்பியது - NASA's Ranger 9 spacecraft sent images of the moon back to Earth on March 24, 1965, before it crashed onto the moon.


🌟 1922ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி தமிழ் திரைப்பட பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மதுரையில் பிறந்தார் - On March 24, 1922, famous Tamil film playback singer T.M.Soundararajan was born in Madurai.


🖋I hope you may have learned little things about the following;

International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations and for the Dignity Victims - World Tuberculosis Day - Muthuswami Dikshitar, Poet, Singer, Veena Player - Coronavirus, India's Nationwide Lockdown - NASA's Ranger 9 Spacecraft - T.M.Soundararajan Famous Singer.

👉Click here to buy Best Sellers in Books.


👇My Other Blogs:

https://law-worldhistory.blogspot.com


- Have a nice day 🌹

- C.Thomas Noble.

email: christothomasnoble@gmail.com

Comments