World Mosquito Day - Rajiv Gandhi, Former Prime Minister of India - N.R.Narayana Murthy, Indian Businessman - Eero Saarinen, Famous Architect - Viking 1 Spacecraft to Mars - Voyager 2 Spacecraft, Launch - Largest Postage Stamp - 20 August
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "World Mosquito Day - Rajiv Gandhi, Former Prime Minister of India - N.R.Narayana Murthy, Indian Businessman - Eero Saarinen, Famous Architect - Viking 1 Spacecraft to Mars - Voyager 2 Spacecraft, Launch - Largest Postage Stamp - Ondi Veeran - Freedom Fighter."
உலக கொசு ஒழிப்பு தினம் - World Mosquito Day :
✒️Only a few species of mosquitoes in the world transmit deadly diseases. On August 20, 1897, a scientist named Sir Ronald Ross discovered that the "Anopheles" mosquitoes transmit malaria fever, "Aedes aegypti" mosquitoes transmit dengue virus, yellow fever virus, chikungunya virus, and Zika virus, "Culex" mosquitoes transmit elephantiasis, and "JE" mosquitoes spreads Japanese encephalitis. That day is observed as Mosquito Eradication Day.
- உலகில் சில வகை கொசுக்கள்தான் கொடிய நோய்களை பரப்புகிறது. அனோபிலஸ் என்ற கொசு மலேரியா காய்ச்சலையும், ஏடிஸ் ஏஜிட்டி என்ற கொசு டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோயையும், கியூலக்ஸ் என்ற கொசு யானைக்கால் நோயையும், ஜே.இ. என்ற கொசு ஜப்பானிய மூளை காய்ச்சலையும் பரப்புகிறது என கடந்த 1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி சர் ரெனால்ட் ராஸ் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அந்நாளே கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
மத நல்லிணக்க தினம் (சத்பவனா திவாஸ்) - Communal Harmony Day (Sadbhavana Diwas) :
✒️Communal Harmony Day (Sadbhavana Diwas) is celebrated every year on 20th August to commemorate the birthday of former Prime Minister of India late Rajiv Gandhi. The day is observed to promote national unity, peace, affection and religious harmony.
- இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20ஆம் தேதி சத்பவனா திவாஸ் அல்லது மத நல்லிணக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது. தேசிய ஒருமைப்பாடு, அமைதி, அன்பு மற்றும் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
Rajiv Gandhi - Former Prime Minister of India |
ராஜீவ் காந்தி - Rajiv Gandhi - Former Prime Minister of India :
- இந்தியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் அரசியல்வாதியான ராஜீவ் காந்தி 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.
- இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமானம் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரென கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார்.
- இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார். 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி அன்று ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
என்.ஆர்.நாராயண மூர்த்தி - Nagavara Ramarao Narayana Murthy - Indian Businessman :
- இந்தியாவின் புகழ் வாய்ந்த தொழிலதிபரும், சமூக சீரமைப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகிய சமூகப் பணிகளை மேற்கொண்டு வருபவருமான என்.ஆர்.நாராயண மூர்த்தி 1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரில் பிறந்தார்.
- இவர் 1981ஆம் ஆண்டு மிக குறைந்த முதலீட்டுடன் சில நண்பர்களுடன் சேர்ந்து 'இன்ஃபோசிஸ்" மென்பொருள் நிறுவனத்தை தொடங்கினார். அடுத்த ஆண்டே பெங்களூரில் தன் அலுவலகத்தினை தொடங்கிய இன்ஃபோசிஸ் நிறுவனம், விரைவில் அதுவே அதன் தலைமை அலுவலகமாகவும் மாறியது.
- இவரது தன்னலமற்ற தொண்டுகளைப் பாராட்டி, அமெரிக்காவின் கௌரவம் மிக்க 'ஹூவர் பதக்கம்" வழங்கப்பட்டது. இவரது சமூக சேவைகளுக்காக, பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டுள்ளன.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 The Enemy Property Act, 1968 : It was enacted on 20th August, 1968 & as per Sec 1(3) It shall be deemed to have come into force on 10th July, 1968, to provide for the continued vesting of enemy property vested in the Custodian of Enemy Property for India under the Defence of India Rules, 1962 and the Defence of India Rules, 1971, and for matters connected therewith.
🌟 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி கேட்வே ஆர்ச்சை (Gateway Arch) வடிவமைத்த கட்டிடக்கலைஞர் ஈரோ சாரினென் பின்லாந்தில் பிறந்தார் - On August 20, 1910, Eero Saarinen, the architect who designed the Gateway Arch, was born in Finland.
🌟 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி நாசா, வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது - On August 20, 1975, NASA launched the Viking 1 Spacecraft to Mars.
🌟 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி நாசா, வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது - On August 20, 1977, NASA launched the Voyager 2 Spacecraft.
🌟இந்தியாவில் மிகப்பெரிய தபால்தலை 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி ராஜிவ் காந்தியால் வெளியிடப்பட்டது - The largest postage stamp in India was issued on 20 August 1991 by Rajiv Gandhi.
🌟 1771ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி, சுதந்திர போரட்ட வீரரும், பூலித்தேவனின் படைத் தளபதியும், தனி ஒருவனாக ஆங்கிலேய படைகளை எதிர்த்ததன் காரணமாக ஒண்டி வீரன் என்று அழைக்கப்படுகின்ற, மாவீரன் ஒண்டிவீரன் மறைந்தார் - On 20th August 1771, freedom fighter and army commander of Pulithevan, Maveeran Ondi Veeran, known as Ondi Veeran because of his single-handed resistance to the British forces, was passed away.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment