Helen Keller (Vision of blind & Ear of deaf), Special child, American Author, Educator, Activist - Akilan, Indian Writer, Novelist - T.M.Thiagarajan, Carnatic Musician - Kuala Lumpur International Airport - Mildred J. Hill, Composer of Happy Birthday to You Song - 27 June

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. 

It can also be about an event. In that line today we are going to know about "Helen Keller (Vision of blind & Ear of deaf), Special child, American Author, Educator, Activist - Akilan, Indian Writer, Novelist - T.M.Thiagarajan, Carnatic Musician - Kuala Lumpur International Airport - Mildred J. Hill, Composer of Happy Birthday to You Song."


குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் - Micro-, Small, and Medium-sized Enterprises Day :

✒️Every year 27th June is celebrated as Micro, Small and Medium Enterprises Day. The day has been celebrated by the United Nations since 2017 to recognize the importance of micro, small and medium enterprises in creating jobs worldwide. 2024 Theme: MSMEs and the SDGs Leveraging the Power and Resilience of Micro-, Small and Medium-sized Enterprises (MSMEs) to Accelerate Sustainable Development and Eradicate Poverty in Times of Multiple Crises.
  • வருடந்தோறும் ஜூன் 27-ம் தேதி குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. உலகளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக 2017-ல் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பின்படி இத் தினம் கொண்டாடப்படுகிறது. 2024 தீம்: MSMEகள் மற்றும் SDGகள் நெருக்கடிகளின் போது நிலையான வளர்ச்சியை விரைவுபடுத்தவும் வறுமையை ஒழிக்கவும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சக்தி மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துதல்.


Helen Keller-Vision of blind & Ear of deaf

ஹெலன் கெல்லர் - Helen Adams Keller - Vision of blind & ear of deaf - Special Child - American Author - Educator - Activist :

✒️Helen Keller was born on June 27, 1880 in Alabama, USA. At the age of one and a half years, she suffered from fever and lost her eyesight, speech and hearing but Inspite of that she achieved what she wanted to do so. she learned English, French, German, Greek and Latin in Braille by the age of ten with the help of her teacher Anne Sullivan. During her college days she wrote her autobiography, "The Story of My Life" in 1903. Her autobiography has been translated into more than 50 languages ​​worldwide, including Tamil. In addition, she has written 12 books. She became the first woman to graduate from a university without sight or hearing. The film "The Miracle Worker," based on her life, won an Oscar. Helen Keller, who worked tirelessly for the welfare of the disabled throughout her life, passed away on 1st June 1968. 

  • ஒன்றரை வயதில் ஏற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பார்வைத்திறன், பேசும்திறன், கேட்கும்திறனை இழந்தாலும், சாதனை படைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய ஹெலன் கெல்லர் 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்தார்.

  • இவர் ஆனி சலிவன் ஆசிரியை உதவியுடன் பத்து வயதுக்குள் பிரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் மொழிகளைக் கற்றார். தனது கல்லூரி நாட்களிலேயே 1903ஆம் ஆண்டு "தி ஸ்டோரி ஆஃப் மை லைப்" என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார்.

  • மேலும் இவருடைய சுயசரிதை தமிழ் உட்பட உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டது. இதை தவிர, 12 நூல்கள் எழுதியுள்ளார். பார்வையின்றி, காதுகேளாமல் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தி மிராக்கிள் ஒர்க்கர் (The Miracle Worker) திரைப்படம் ஆஸ்கார் விருதை பெற்றது.

  • வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அயராமல் பாடுபட்ட ஹெலன் கெல்லர் 1968ஆம் ஆண்டு ஜுன் 1ந் தேதி மறைந்தார்.

👉Click here to buy Helen Keller Collections.


அகிலன் - Akilandam (pen name Akilan) Indian Writer - Novelist :

✒️He has many faces as a Freedom Fighter, Famous Novelist, Playwright, Children's Writer, Translator, Writer, translator and columnist. Many of his works have received awards from the Government of Tamil Nadu, India. Akilan, who made important contributions to Tamil literature, passed away in 1988.

  • தமிழில் முதல் ஞானபீட விருது பெற்ற அகிலன் 1922ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் பி.வி.அகிலாண்டம்.

  • சுதந்திரப் போராட்ட வீரர், புகழ்பெற்ற புதின ஆசிரியர், நாடகாசிரியர், சிறுவர் நூலாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், கட்டுரையாளர் என இவருக்கு பல முகங்கள் உண்டு.

  • வேங்கையின் மைந்தன் என்ற நாவல் 1963ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதையும், சித்திரப்பாவை 1975ஆம் ஆண்டு ஞானபீட விருதையும் பெற்றன. இவரின் பல படைப்புகள் தமிழக அரசு விருதுகளைப் பெற்றுள்ளன.

  • தமிழ் இலக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய அகிலன், 1988ஆம் ஆண்டு ஜனவரி 31ந் தேதி  மறைந்தார்.

👉Click here to buy Akilan Collections.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 2007ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைக்கலைஞரான டி.எம்.தியாகராஜன் மறைந்தார் - T.M.Thiagarajan, a Carnatic musician from Tamil Nadu, passed away on June 27, 2007.


🌟 1998ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது - Kuala Lumpur International Airport opened on June 27, 1998.


🌟 1967ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி உலகின் முதலாவது ஏடிஎம் லண்டன் என்ஃபீல்டில் அமைக்கப்பட்டது - On June 27, 1967, World's first ATM was set up in Enfield, London.


🌟 1859ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி ஹேப்பி பர்த் டே டூ யூ பாடலை இயற்றிய மில்ட்ரெட் ஜே.ஹில் அமெரிக்காவில் பிறந்தார் - Mildred J.Hill was born in the United States on June 27, 1859, composing the song Happy Birthday to You. It is the most recognized birthday song in all over the world, the lyrics have been translated from english into most of the languages.

👉Click here to buy Mildred J.Hill Collections.


✒️I hope you may have learned little things about the following ; 

Helen Keller (Vision of blind & Ear of deaf), Special child, American Author, Educator, Activist - Akilan, Indian Writer, Novelist - T.M.Thiagarajan, Carnatic Musician - Kuala Lumpur International Airport - Mildred J. Hill, Composer of Happy Birthday to You Song.


👉Click here to buy Best Sellers in Books.


👇My Other Blogs:

https://law-worldhistory.blogspot.com


- Have a nice day 🌹

- C.Thomas Noble.

email: christothomasnoble@gmail.com

Comments