Balakumaran, Renowned Writer - Ernst Walter Mayr, Biologist - Isaac Newton, Principia Mathematica - BBC's First Broadcast - Dolly, first cloned mammal - July 5

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today. 

It's might be about, Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Balakumaran, Renowned Writer - Ernst Walter Mayr, Biologist - Isaac Newton, Principia Mathematica - BBC's First Broadcast - Dolly, first cloned mammal."


Balakumaran - Writer & Author

பாலகுமாரன் - Balakumaran, Renowned Writer :

✒️புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் 1946ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பழமானேரி என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும், சில கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மேலும், இவர் சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்), இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்), தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு) மற்றும் கலைமாமணி போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். தன்னுடைய எழில்மிகு கற்பனைத் திறனால், எழுத்து மற்றும் திரைத்துறையில் தனக்கென ஒரு நீங்காத இடத்தைப் பெற்ற இவர் 2018ஆம் ஆண்டு ஜுலை மாதம் 5ந் தேதி தனது 71வது வயதில் மறைந்தார்.

👉Click here to buy; Balakumaran Collections


எர்னஸ்ட் வால்டர் மயர் - Ernst Walter Mayr,  Renowned Biologist :

✒️பரிணாமவியல் ஆராய்ச்சியாளர் எர்னஸ்ட் வால்டர் மயர் 1904ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். இவர் சிறுவயதிலிருந்தே பறவையியலில் ஆர்வம் கொண்டிருந்ததால் பல அரிய பறவை இனங்களையும் எளிதாக அடையாளம் காட்டி விடுவார். இவர் தனது வாழ்நாளில் 26 புதுவகைப் பறவையினங்களுக்கும், 38 புதுவகை பூக்களுக்கும் பெயர் சூட்டியுள்ளார். 1942-ல் உயிரினங்களின் மரபியல், பரிணாம தொகுப்புகள் தொடர்பான இவரது முதல் புத்தகம் வெளிவந்தது. இவர் மொத்தம் 25 புத்தகங்களை எழுதியுள்ளார். தற்கால பரிணாம வளர்ச்சி ஆராய்ச்சிக் கோட்பாடுகளுக்கும், உயிரியியல் சிற்றின கோட்பாட்டு வளர்ச்சிக்கும் இவரது ஆராய்ச்சிகள் வழிவகுத்தன. பன்முகப் பரிமாணங்களை கொண்ட எர்னஸ்ட் மயர் 2005ஆம் ஆண்டு ஜுலை 5ந் தேதி தனது 100வது வயதில் மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1687ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி ஐசக் நியூட்டன் தனது புகழ்பெற்ற 'பிரின்ஸிபியா மேத்தமேட்டிகா' என்ற நூலை வெளியிட்டார் - On July 5, 1687, Isaac Newton published his famous book 'Principia Mathematica' (Mathematical Principles of Natural Philosophy).

👉Click here to buy ; Principia Mathematica


🌟பிபிசி தன் முதல் தொலைக்காட்சிச் செய்தியை 1954ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி ஒளிபரப்பியது - The BBC broadcast its first television news on 5th July 1954.


🌟 1996ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டியான டோலி என்ற செம்மறி ஆடு உருவாக்கப்பட்டது - On July 5, 1996, the first mammal, Dolly the sheep, was cloned.


🖋I hope you may have learned little things about the following;

Balakumaran, Renowned Writer - Ernst Walter Mayr, Biologist - Isaac Newton, Principia Mathematica - BBC's First Broadcast - Dolly, first cloned mammal.


  👇My Other Blogs:

https://law-worldhistory.blogspot.com


- Have a nice day 🌹

- C.Thomas Noble

Comments

Popular posts from this blog