M.S.G, Renowned Violinist - Ve.Thillainayagam, Pioneer of Tamil Nadu Library Department, Writer - Sichuan, Tragedy - NASA's Spirit Rover Launch - Sundar Pichai, Indian-American Business Executive, CEO of Google - June 10

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.

It's might be about, Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "M.S.G, Renowned Violinist - Ve.Thillainayagam, Pioneer of Tamil Nadu Library Department, Writer - Sichuan, Tragedy - NASA's Spirit Rover Launch - Sundar Pichai, Indian-American Business Executive, CEO of Google."


எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் - M.S.Gopalakrishnan - Renowned Violinist :

✒️Famous violinist M.S.Gopalakrishnan was born on 10 June 1931 in Mylapore, Chennai. He staged his first concert at the age of eight. He has played violin for many leading singers. Conducted solo violin concerts for 50 years. He introduced a new style called Paarur-MSG style. He has received many awards like Padma Bhushan, Padma shri, Kalaimamani, Sangita Kalanidhi, Sangeetha Kalasikhamani, Kerala Sangeetha Nataka Akademi, T.Choudayya Award, Violinist Samrat, Violinist Chakraborty, Sapthagiri Sangeetha Vidwanmani. M.S.Gopalakrishnan, fondly called as 'MSG' by music lovers, passed away on January 3, 2013, after conducting concerts all over the world.

✒️பிரபல வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் 1931ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார். இவர் தனது எட்டு வயதில், முதல் கச்சேரியை அரங்கேற்றினார். பல முன்னணி பாடகர்கள் அனைவருக்கும் வயலின் வாசித்துள்ளார். தனி வயலின் கச்சேரிகளை 50 ஆண்டுகாலம் நடத்தி வந்தார். இவர் பாரூர் - எம்எஸ்ஜி ஸ்டைல் என்ற புதிய பாணியை அறிமுகம் செய்தார். பத்ம பூஷண், பத்மஸ்ரீ, கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, கேரள சங்கீத நாடக அகாடமி விருது, டி.சௌடையா விருது, வயலின் வாத்திய சாம்ராட், வயலின் வாத்திய சக்ரவர்த்தி, சப்தகிரி சங்கீத வித்வமணி போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் இசைக் கச்சேரிகளை நடத்தி இசைப் பிரியர்களால் 'எம்எஸ்ஜி" என பாசத்துடன் அழைக்கப்பட்ட எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் 2013ஆம் ஆண்டு ஜனவரி 3ந் தேதி மறைந்தார்.


Ve.Thillainayagam - Pioneer in Library Department

வே.தில்லைநாயகம் - Ve.Thillainayagam - Pioneer of Tamil Nadu Library Department - Writer :

✒️The pioneer of the Tamil Nadu Library Department, Ve.Thillainayagam was born on June 10, 1925 in Chinnamanur, Theni district. He received his library training in 1949 with the help of the government and became the first librarian to run the public education department. He retired in 1982 after serving as the director of the library department for 10 consecutive years in the same department and turning it into a golden age of the Tamil Nadu library movement. He was awarded an honorary doctorate degree by the World University in 1982 for his book 'Indhiya Noolaga iyakkam' (Indian Library Movement). He has written some books including 'Vethiyam 1008' in Tamil. Many of his books have won the Tamil Nadu Government First Prize. The father of the Tamil Nadu Public Library Movement, Ve.thillainayagam passed away on March 11, 2013.

✒️தமிழக நூலகத்துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் 1925ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்தார். இவர் 1949ஆம் ஆண்டு அரசு உதவியுடன் நூலகப் பயிற்சி பெற்று, பொதுக்கல்வித்துறை இயக்க முதல் நூலகரானார். ஒரே துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக நூலகத்துறை இயக்குநராக பதவி வகித்து, தமிழக நூலக இயக்கத்தின் பொற்காலமாக மாற்றிய இவர் 1982ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் எழுதிய 'இந்திய நூலக இயக்கம்" என்ற நூலுக்காக உலக பல்கலைக்கழகம் 1982ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தமிழில் 'வேதியம் 1008" உட்பட சில நூல்களை எழுதியுள்ளார். இவரது பல நூல்கள் தமிழக அரசின் முதல் பரிசை பெற்றவை. தமிழக பொது நூலக இயக்கத்தின் தந்தை வே.தில்லைநாயகம் 2013ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி மறைந்தார்.

👉Click here to buy Ve.Thillainayagam collections... 


Sundar Pichai - CEO of Google

சுந்தர் பிச்சை - Sundar Pichai - CEO of Google :

✒️Sundar Pichai, the CEO of Google who exposed Tamil talent to the world, was born on June 10, 1972 in Madurai. He joined Google in 2004. Later he was appointed by Google as vice president of product development and senior vice president of Chrome and apps. In 2009, he was appointed to oversee the development of several Google applications such as Gmail and Google Maps. In 2013, Sundar Pichai also worked as the in-charge of the Android operating system. Also, he was appointed Product Chief in Google's Product Department. Thereafter he was appointed as the CEO of Google in August 2015. He is a proud Tamilian who has fought hard and won, and is stepping into his 53rd year.

✒️உலகிற்கு தமிழரின் திறமையை  வெளிக்காட்டிய கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் 1972ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி மதுரையில் பிறந்தார். இவர் 2004-ல் கூகுளில் இணைந்தார். பிறகு கூகுள் நிறுவனத்தால் தயாரிப்பு மேம்பாட்டு துறையில் துணை தலைவராகவும், குரோம் மற்றும் ஆப்ஸ்களின் மூத்த துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2009-ஆம் ஆண்டு கூகுளின் ஜிமெயில் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்ற பல பயன்பாடுகளின் வளர்ச்சி குறித்து மேற்பார்வையிட அமர்த்தப்பட்டார். 2013-ல் சுந்தர் பிச்சை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பொறுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். மேலும், கூகுளின் தயாரிப்பு துறையில் தலைமை பொறுப்பில் ப்ராடெக்ட் சீஃப் நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட், 2015ஆம் ஆண்டு கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். விடாமுயற்சியோடு போராடி வெற்றிப்பெற்ற தமிழன் என்ற பெருமைக்குரிய இவர் தனது 53வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

👉Click here to buy Sundar Pichai Collections.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟1786ஆம் ஆண்டு ஜுன் 10ந் தேதி, சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆற்றின் அணை உடைந்ததில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100,000 பேர் உயிரிழந்தனர் - On June 10, 1786, 100,000 people died in a flood in Sichuan Province, China. The said calamity was caused by the broke out of the Dadu river dam due to the earthquake that occurred ten days before the incident.


🌟 2003ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது - NASA's Spirit (rover) was launched to Mars on June 10, 2003.


🖋I hope you may have learned little things about the following;

M.S.G, Renowned Violinist - Ve.Thillainayagam, Pioneer of Tamil Nadu Library Department, Writer - Sichuan, Tragedy - NASA's Spirit Rover Launch - Sundar Pichai, Indian-American Business Executive, CEO of Google.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments