Ada E. Yonath, Crystallographer, Chemist, Nobel Laureate - Dan Brown, American Author - Vachathi Violence - Ilya Frank, Russian Physicist - Vijay, Actor - June 22

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today. 

It's might be about, Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Ada E. Yonath, Crystallographer, Chemist, Nobel Laureate - Dan Brown, American Author - Vachathi Violence - Ilya Frank, Russian Physicist - Vijay, Actor."


உலக மழைக்காடுகள் தினம் - World Rainforest Day :

✒️The day is celebrated on June 22nd every year to raise awareness and encourage action to protect the world's rainforests. Whereas rainforests contribute to global oxygen production. They absorb significant amounts of carbon dioxide from the atmosphere. Rainforests are called the "Lungs of the Earth" because they play a significant role in maintaining a balanced climate.

✒️உலகின் மழைக்காடுகளைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனை ஊக்குவிக்கும் நடவடிக்கையை எடுக்கவும், இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22 அன்று கொண்டாடப்படுகிறது. மழைக்காடுகள் உலகளாவிய ஆக்ஸிஜன் உற்பத்திக்கு பங்களிக்கின்றன. அவை வளிமண்டலத்திலிருந்து கணிசமான அளவு கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகின்றன. மழைக்காடுகள் "பூமியின் நுரையீரல்" என்று அழைக்கப்படுகின்றன, ஏனெனில் அவை சமநிலையான காலநிலையை பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.

Ada Yonath - Crystallographer

அடா யோனத் - Ada E. Yonath - Crystallographer - Chemist - Nobel Laureate :

✒️Israeli researcher and crystallographer Ada Yonath was born on June 22, 1939 in Jerusalem, Israel. She received her bachelor's degree in chemistry from the Hebrew University of Jerusalem. She received her Master's degree in Biochemistry. After 20 years of hard work, she discovered how antibiotics protect ribosomes from pathogens. These led to the production of antibiotic drugs. In 2009, Venkatraman Ramakrishnan and Thomas Steitz shared the Nobel Prize in Chemistry for their research on the structure and function of ribosomes. Today she turns 85, the first Israeli woman to win a Nobel Prize.

✒️இஸ்ரேல் ஆராய்ச்சியாளரும், படிகவியலாளருமான அடா யோனத் 1939ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் பிறந்தார். ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். உயிரி வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 20 ஆண்டுகால கடுமையான உழைப்பில் தாக்கும் நோய் கிருமிகளிடம் இருந்து ரிபோசோம்களை (ribosome) ஆன்டிபயாடிக் மருந்துகள் எவ்வாறு பாதுகாக்கின்றன என்று கண்டறிந்தார். இவை ஆன்டிபயாடிக் மருந்துகள் உற்பத்தி செய்ய வழிவகுத்தன. ரிபோசோம்களின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக, வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டெய்ஸ் ஆகிய இருவருடன் இணைந்து வேதியியலுக்கான நோபல் பரிசை 2009ஆம் ஆண்டு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்ரேலிய பெண் என்ற பெருமைக்குரிய இவர் இன்று 85வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.


Dan Brown - Renowned Author

டான் பிரவுன் - Dan brown - American Author :

✒️Dan Brown, a writer with millions of readers, was born on June 22, 1964 in Exeter, New Hampshire, USA. He started his career as a singer-songwriter and pianist and came to Hollywood in 1991. He wrote the books 'Digital Fortress', 'Deception Point', 'Angels & Demons'. His 2003 book 'The Da Vinci Code' topped the New York Times bestseller list in its first week of publication. Dan Brown, who continues to hone his writing craft, is entering his 60th year.

✒️பல கோடி வாசகர்களை கொண்ட எழுத்தாளர் டான் பிரவுன் 1964ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி அமெரிக்காவில் நியு ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் உள்ள எக்ஸிடரில் (Exeter) பிறந்தார். பாடகர்-பாடலாசிரியர், பியானோ கலைஞர் என தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் ஹாலிவுட்கு 1991-ல் வந்தார். மேலும், இவர் 'டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ்' (Digital Fortress), 'டிஸப்ஷன் பாயின்ட்' (Deception Point), 'ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ்' (Angels & Demons) ஆகிய புத்தகங்களை எழுதினார். 2003-ல் வெளிவந்த இவரது 'தி டாவின்சி கோட்' (The Da Vinci Code) என்ற புத்தகம் வெளிவந்த முதல் வாரத்திலேயே நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையில் சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. தொடர்ந்து தன்னுடைய எழுத்து பணியை செம்மையாக செய்து வரும் டான் பிரவுன், தனது 60வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

👉Click here to buy Dan Brown Collections.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟தமிழ்நாட்டில் வாச்சாத்தி கிராமத்தில் 1992ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ந் தேதியிலிருந்து 22ந் தேதிவரை வாச்சாத்தி வன்முறை நடந்தேறியது. தமிழ்நாட்டின் அதிகாரவர்க்கத்தினரால் வாச்சாத்தி மக்கள் மீது நடந்த வன்கொடுமைத் தாக்குதல்களால், பலர்‌ காயமுற்றனர், பெண்கள் வன்புணரப்பட்டனர் - Brutal Violence took place at ,Vachathi village in Tamil Nadu between 20th June to 22nd June 1992. Due to such violence by the bureaucrats of Tamil Nadu many people were injured and women were raped.


🌟நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர் ஈலியா பிராங்க் 1990ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி மறைந்தார் - Nobel Prize-winning Russian physicist Ilya Frank died on June 22, 1990.


🌟விஜய், திரைப்பட நடிகர், பாடகர், 1974ஆம் ஆண்டு ஜுன் 22ந் தேதி, பிறந்தார் - Vijay, film actor, singer, born on 22nd June 1974.


🖋I hope you may have learned little things about the following;

Ada E. Yonath, Crystallographer, Chemist, Nobel Laureate - Dan Brown, American Author - Vachathi Violence - Ilya Frank, Russian Physicist - Vijay, Actor.


  👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog