International Firefighters Day - World Password Day - Tyagaraja, Composer & Vocalist of Carnatic Music - Robin Cook, Famous American Novelist - Tipu Sultan, King of Mysore - Margaret Thatcher, UK's First Female Prime Minister - May 4

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "International Firefighters Day - World Password Day - Tyagaraja, Composer & Vocalist of Carnatic Music - Robin Cook, Famous American Novelist - Tipu Sultan, King of Mysore - Margaret Thatcher, UK's First Female Prime Minister."


சர்வதேச தீயணைக்கும் படையினர் தினம் - International Firefighters Day :

✒️May 4th is celebrated as International Firefighters Day. In 1999, 5 soldiers lost their lives fighting a massive bushfire in Australia. A worldwide e-mail campaign was launched to recall them. This is followed by International Firefighters Day on May 4th across the world.

✒️மே 4ம் தேதி சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களை நினைவுக்கூறுவதற்காக உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4ஆம் தேதி சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாகப் பின்பற்றப்படுகிறது.


உலக கடவுச் சொல் தினம் - World Password Day :

✒️This festival is celebrated annually on the first Thursday of May. This day is celebrated to encourage the use of secure password i.e. password that no one can guess among internet users all over the world. (This year 2024 May 2nd is celebrated as Password Day).

✒️இத்தினம் ஆண்டுதோறும் மே மாத முதலாவது வியாழக்கிழமையில் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இணைய பயனர்கள் மத்தியில் பாதுகாப்பான கடவுச் சொல்லை அதாவது யாரும் யூகிக்க முடியாத கடவுச் சொல்லை பயன்படுத்துவதை ஊக்குவிக்க இத்தினத்தை கொண்டாடி வருகின்றனர்.


Tyagaraja - Carnatic Composer

தியாகராஜ சுவாமிகள் - Tyagaraja - Composer & Vocalist of Carnatic Music :

✒️The musical genius Sadguru Sri Tyagaraja Swami was born in Tiruvarur on 4th May 1767. Sri Ramakrishnananda Swami taught him the Narada Upasana mantra. It is said that Sage Narada who chanted it with devotion showed him the rare book 'Swararnavam' containing the secrets of Sangeet Swara. Hearing about his musical talent, King Saraboji came to his court and asked him to sing his praises. But, steeped in devotion to Rama, he refused saying that he would not sing the praises of man. He did many things like composing kirtanas, composing music for them, reciting Vedas, learning Puranas and teaching music to others. Tyagaraja Swami, who rendered immense services to music, passed away on 6th January 1847.

✒️'தியாகப் பிரம்மம்" என்று போற்றப்படும் இசை மேதை சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் 1767ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி திருவாரூரில் பிறந்தார். ஸ்ரீராமகிருஷ்ணானந்தா சுவாமி நாரத உபாசனை மந்திரத்தை இவருக்கு உபதேசித்தார். பக்தியுடன் அதை உச்சரித்து வந்த இவருக்கு நாரத முனிவரே காட்சி கொடுத்து சங்கீத ஸ்வர ரகசியங்கள் அடங்கிய 'ஸ்வரார்ணவம்" என்ற அரிய நூலை வழங்கியதாக கூறப்படுகிறது. இவரது இசைத்திறமை குறித்து கேள்விப்பட்ட சரபோஜி மன்னர் தன் அரசவைக்கு வந்து தன்னைப் புகழ்ந்து பாடச் சொன்னார். ஆனால், ராம பக்தியில் திளைத்திருந்த இவர் மனிதரை துதி செய்து பாடமாட்டேன் என்று மறுத்துவிட்டார். இவர் கீர்த்தனைகள் இயற்றுவது, அவற்றிற்கு இசையமைத்து பாடுவது, வேத பாராயணம் செய்வது, புராணங்கள் கற்பது, இசையை மற்றவர்களுக்கு கற்றுத்தருவது என பல செயல்களை செய்தார். இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய தியாகராஜ சுவாமிகள் 1847ஆம் ஆண்டு ஜனவரி 6ந் தேதி மறைந்தார்.


👉Click here to buy : Tyagaraja Collections.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1940ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி பிரபல அமெரிக்க நாவல் ஆசிரியரும், அறுவை சிகிச்சை நிபுணருமான ராபின் குக் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தார் - Robin Cook, a famous American novelist and surgeon, was born on May 4, 1940 in New York City, USA.

👉Click here to buy Robin Cook Collections.


🌟 1799ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி இந்திய வரலாற்றில் தனக்கென்று தனிப்பெரும் இடம் பிடித்த மைசூர் மன்னன் திப்பு சுல்தான் மறைந்தார் - On May 4, 1799, Tipu Sultan, the king of Mysore who had a great place in Indian history, died.


🌟 மே 4, 1979 இல், மார்கரெட் தாட்சர், ஐக்கிய ராஜ்ஜியத்தின் முதல் பெண் பிரதமரானார் - On May 4, 1979, Margaret Thatcher became the first female Prime Minister of the United Kingdom.


🖋I hope you may have learned little things about the following;

International Firefighters Day - World Password Day - Tyagaraja, Composer & Vocalist of Carnatic Music - Robin Cook, Famous American Novelist - Tipu Sultan, King of Mysore - Margaret Thatcher, UK's First Female Prime Minister.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog