World Food Day - World Anesthesia Day - Veerapandiya Kattabomman, Freedom Fighter, 18th-Century Tamil Palayakarrar - Noah Webster, American Lexicographer - Bengal Division, Establish - Walt Disney, Started - Gunter Grass, Novelist - Chembai Vaithiyanatha Bhagavathar, Carnatic Musician - 16 October

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "World Food Day - World Anesthesia Day - Veerapandiya Kattabomman, Freedom Fighter, 18th-Century Tamil Palayakarrar - Noah Webster, American Lexicographer - Bengal Division, Establish - Walt Disney, Started - Gunter Grass, Novelist - Chembai Vaithiyanatha Bhagavathar, Carnatic Musician."


உலக உணவு தினம் - World Food Day :

✒️World Food Day is observed on October 16 to emphasize the importance of food. This day was announced by the Food and Agriculture Organization of the United Nations in 1979. World Food Day is observed with the aim that no one should go hungry and everyone should have access to food.

  • உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.

  • பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.


உலக மயக்கவியல் தினம் - World Anesthesia Day :

✒️On October 16, 1847, the first operation using "Ether" was performed. World Anesthesia Day is observed on 16th October every year to honor this historic event in the medical world.

  • 1847ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி முதன்முறையாக ஈதர் பயன்படுத்தி அறுவை சிகிச்சை நடைபெற்றது. மருத்துவ உலகில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த நிகழ்வை போற்றும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி உலக மயக்கவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

Veerapandiya Kattabomman - Freedom Fighter

வீரபாண்டிய கட்டபொம்மன் - Veerapandiya Kattabomman - Freedom Fighter - 18th-Century Tamil Palayakarrar :


✒️Today is his memorial day!

✒️Kattabomman, the Palayakkara king who fought against the British, was born on January 3, 1760 in Panchalankurichi. The British government decided to collect taxes from the villagers to maintain their rule. The British commander who collected taxes in the area could not collect taxes from Kattabomman. In 1797 British General Allen came with a large force to fight Kattabomman. Unable to demolish the fort, he ran away. Then Tirunelveli Collector Jackson invited Kattabomman to come and meet him. But Jackson, who asked Kattabomman to come to different places instead of meeting at a specific place, finally met at Ramanathapuram. Then, they tried to arrest Kattabomman. Kattabomman overcame it and returned safely to Panchalankurichi. During that meeting, Jackson urged him to pay taxes. Kattabomman boldly told him that we are independent kings, we don't need to pay tax to you. Seeing his bravery, all the surrounding villagers opposed the British. He was finally interrogated at Kayathar. He was hanged on 16th October, 1799 in kayathar, who is a symbol of valor even after many centuries.

  • இன்று இவரின் நினைவு தினம்!
  • ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார்.

  • பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டுவதற்காக,பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்க முடிவு செய்தது. அப்பகுதியில் வரி வசூலிக்கும் ஆங்கிலேயத் தளபதியால் கட்டபொம்மனிடமிருந்து வரி வசூலிக்க முடியவில்லை. 1797ஆம் ஆண்டு கட்டபொம்மனுடன் போரிட பெரும்படையுடன் ஆங்கிலேயத் தளபதி ஆலன் வந்தார். கோட்டையைத் தகர்க்க முடியாமல் தோற்று ஓடினார். பின்பு நெல்லை கலெக்டர் ஜாக்ஸன் தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனை அழைத்தார்.

  • ஆனால் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்காமல் வெவ்வேறு இடங்களுக்கு கட்டபொம்மனை வரச் சொல்லிய ஜாக்ஸன், இறுதியாக ராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது, கட்டபொம்மனை கைது செய்ய முயற்சித்தனர். கட்டபொம்மன் அதை முறியடித்து, பத்திரமாக பாஞ்சாலங்குறிச்சிக்கு திரும்பினார்.

  • அந்த சந்திப்பின்போது, வரி செலுத்துமாறு ஜாக்ஸன் இவரிடம் வலியுறுத்தினார். உங்களுக்கு வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சுதந்திர மன்னர்கள் என்று கட்டபொம்மன் துணிச்சலாக அவரிடம் கூறினார். இவரது வீரத்தைப் பார்த்து, சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களும் ஆங்கிலேயரை எதிர்த்தார்கள்.

  • இறுதியாக கயத்தாறு என்ற இடத்தில் அவர்மீது விசாரணை நடத்தப்பட்டது. பல நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாகத் திகழும் இவர் 1799ஆம் ஆண்டு அக்டோபர் 16ந் தேதி கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events : 


🌟The Land Acquisition (Mines) Act, 1885 : It was enacted & enforced on 16th October 1885, to provide for cases in which Mines or Minerals are situate under land which it is desired to acquired under the Land Acquisition Act, 1870.


🌟The National Security Guard Act, 1986 : It was enacted on 22nd september 1986 and came into force on 16th October 1986, to provide for the constitution and regulation of an armed force of the Union for combating terrorist activities with a view to protecting States against internal disturbances and for matters connected therewith.


🌟 அமெரிக்க அகராதி இயற்றிய பாடநூல் முன்னோடி, ஆங்கில மொழி எழுத்துச் சீர்திருத்தவாதியான நோவா வெப்ஸ்டர் 1758 அக்டோபர் 16 அன்று பிறந்தார் - American lexicographer, textbook pioneer, English-language spelling reformer, Noah Webster was born on 16th October, 1758.


🌟 1905ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காளப் பிரிவு இடம்பெற்றது - The Bengal Division was established in British India on October 16, 1905.


🌟 வால்ட் டிஸ்னி நிறுவனம் 1923 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது - The Walt Disney Company was started on 1923 October 16.


🌟 ஜெர்மன் நாவலாசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், கிராஃபிக் கலைஞர், சிற்பி, மற்றும் 1999 ஆம் ஆண்டு இலக்கிய நோபல் பரிசைப் பெற்ற கூன்டர் கிராசு 1927 அக்டோபர் 16 ஆம் தேதி பிறந்தார் - German novelist, poet, playwright, graphic artist, sculptor, and recipient of the 1999 Nobel Prize in Literature, Gunter Grass was born on 16th October, 1927.


🌟1974ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி கர்நாடக இசைக்கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் மறைந்தார் - Carnatic musician Chembai Vaithiyanatha Bhagavathar passed away on October 16, 1974.


🖋I hope you may have learned little things about the following;

World Food Day - World Anesthesia Day - Veerapandiya Kattabomman, Freedom Fighter, 18th-Century Tamil Palayakarrar - Noah Webster, American Lexicographer - Bengal Division, Establish - Walt Disney, Started - Gunter Grass, Novelist - Chembai Vaithiyanatha Bhagavathar, Carnatic Musician.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email:christothomasnoble@gmail.com

Comments